அமைச்சர் செந்தில் பாலாஜி மனைவி ஆட்கொணர்வு மனுதாக்கல் – நீதிபதி விலகல்…!

செந்தில் பாலாஜி மனைவி மேகலாவின் ஆட்கொணர்வு மனுவை விசாரிக்க இருந்த நீதிபதி சக்திவேல் விலகியுள்ளார்.
அமைச்சர் செந்தில் பாலாஜி கைது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் அவரது மனைவி மேகலா ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்துள்ளார். அமைச்சர் செந்தில் பாலாஜியை சட்டவிரோதமாக அமலாக்கத்துறை கைது செய்யப்பட்டிருப்பதாக அவரது மனைவி மேகலா ஆட்கொணர்வு மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த மனு விசாரிக்கப்படவிருந்த நிலையில், செந்தில் பாலாஜி மனைவி மேகலாவின் ஆட்கொணர்வு மனுவை விசாரிக்க இருந்த நீதிபதி சக்திவேல் விலகியுள்ளார். இன்றே விசாரிப்பதற்கு செந்தில் பாலாஜி தரப்பில் முயற்சிகள் எடுக்கப்படுகிறது. நடைமுறையை பின்பற்றி புதிய அமர்வு அமைக்கப்படும் என தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார்.