VCK Leader Thirumavalavan [Image source : Vikatan]
நான் ஒருபோதும் மாற்றுத்திறனாளிகளைக் காயப்படுத்தும் உள்நோக்கமோ, அவர்களைப்பற்றி இளக்காரமான மதிப்பீடோ கொண்டவனுமில்லை என திருமாவளவன் ட்வீட்.
கடந்த ஜூன்-30 அன்று மேலவளவில் நடந்த “மேலவளவுப் போராளிகளின் வீரவணக்க நினைவேந்தல்” நிகழ்வில் உரையாற்றும் போது, விசிக தலைவர் திருமாவளவன் அவர்கள் தனது திருமணம் குறித்து பேசியிருந்தார். அப்போது பேசிய அவரை, நான் என்ன நொண்டியா முடமா? திருமணம் செய்யாமல் இருக்க என தெரிவித்திருந்தார்.
இந்த கருத்து குறித்து பலரும் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், திருமாவளவன் அவர்கள் வருத்தம் தெரிவித்து கருத்து பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், கடந்த சூன்-30 அன்று மேலவளவில் நடந்த “மேலவளவுப் போராளிகளின் வீரவணக்க நினைவேந்தல்” நிகழ்வில் உரையாற்றும் போது மாற்றுத் திறனாளிகள் மனம்நோகும் வகையில் ஓரிரு சொற்கள் தவறி விழுந்துவிட்டன. அப்போதே அதற்கு எனது வருத்தத்தையும் தெரிவித்தேன்.
மாற்றுத்திறனாளிகளின் நலன்களுக்காகவும் உரிமைகளுக்காகவும் தொடர்ந்து குரல்கொடுத்து வருகிற இயக்கம் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி. நான் ஒருபோதும் மாற்றுத்திறனாளிகளைக் காயப்படுத்தும் உள்நோக்கமோ, அவர்களைப்பற்றி இளக்காரமான மதிப்பீடோ கொண்டவனுமில்லை. இதனை மாற்றுத் திறனாளிகளுக்கான இயக்கத்தை நடத்தும் முன்னணி பொறுப்பாளர்கள் பலரும் அறிவர்.
என்னைப்பற்றி தனிப்பட்டமுறையில் அவதூறுபரப்பும் ஒருசில அற்பர்களைக் கண்டிக்கும் வகையில் நான் ஆதங்கப்பட்டு எனது உரையின் போக்கிலேயே தன்னிலை விளக்கம் அளித்தேன். அப்போது அச்சொற்கள் என்னையும் அறியாமல் தவறுதலாக நா தவறி வந்து விழுந்தன. அதற்காக உடனே எனது வருத்தத்தையும் வெளிப்படுத்தினேன். இனி அவ்வாறு நிகழாவண்ணம் பார்த்துக்கொள்கிறேன். வருந்துகிறேன். மாற்றுத்திறனாளிகள் தோழர்கள் பொறுத்தருளவும்.’ என தெரிவித்துள்ளார்.
சென்னை : திருவான்மியூர் - தரமணி சாலையில் திடீரென ஏற்பட்ட பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னையின்…
ஹரியானா : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கப்பட்டதிலிருந்து இந்தியாவை உளவு பார்த்ததாகவும், பாகிஸ்தானின் ஐஎஸ்ஐக்கு தகவல்களை வழங்கியதாகவும் கூறி, ஹரியானாவில் இதுவரை…
பெங்களூர் : இந்தியா-பாகிஸ்தான் எல்லை பதட்டங்கள் காரணமாக 10 நாள் இடைவெளிக்குப் பிறகு ஐபிஎல் போட்டிகள் மீண்டும் தொடங்கவுள்ள நிலையில்,…
சீனா : 2019 ஆம் ஆண்டில் உலகையே உலுக்கிய கொரோனா வைரஸ் தொற்று, ஆசியாவின் சில பகுதிகளில் மீண்டும் பரவி…
சென்னை : பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 467 மதிப்பெண்களுடன் தமிழில் 93 மதிப்பெண் எடுத்து பீகார் மாணவி ஜியா…
சென்னை : இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் நடிகர்கள் கமல்ஹாசன் மற்றும் சிம்பு நடித்துள்ள ''தக் லைஃப்'' திரைப்படம் ஜூன் 5ம்…