சென்னை சாலையில் திடீர் பள்ளம்.., உள்ளே சிக்கிய கார்.! மெட்ரோ நிர்வாகம் விளக்கம்!
மெட்ரோ ரயில் பணிகளால் சாலையில் பள்ளம் ஏற்பட்டதாக தகவல் பரவிய நிலையில் மெட்ரோ ரயில் நிர்வாகம் மறுப்பு தெரிவித்துள்ளது.

சென்னை : திருவான்மியூர் – தரமணி சாலையில் திடீரென ஏற்பட்ட பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னையின் தரமணி பகுதியில், அடையாறு U-வடிவ பாலத்திற்கு அருகே உள்ள சாலையில் திடீரென ஒரு பள்ளம் ஏற்பட்டது.
இந்தப் பள்ளத்தில் ஒரு சொகுசு கார் விழுந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதுகாரில் இருந்த கைக்குழந்தை உட்பட 5 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர். இதனால், தரமணி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இந்தச் சம்பவம் சமூக ஊடகங்களிலும் செய்தி ஊடகங்களிலும் வேகமாக பரவியது.
சென்னையில் திடீர் பள்ளம் pic.twitter.com/6Zb5bWj8SD
— Guna Sekaran (@SekaranGun99142) May 17, 2025
இந்தப் பள்ளத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டதாகவும், பொதுமக்களிடையே அச்சம் நிலவுவதாகவும் தெரிகிறது. இந்த நிலையில், மெட்ரோ ரயில் பணிகளால் சாலையில் பள்ளம் ஏற்பட்டதாக தகவல் பரவிய நிலையில், மெட்ரோ ரயில் நிர்வாகம் மறுப்பு தெரிவித்துள்ளது. மெட்ரோ ரயில் சுரங்கப் பணிகளுக்கும், சாலை பள்ளத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என்று சென்னை மெட்ரோ நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.