புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில்,ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிராக புதுச்சேரி பேரவையில் தீர்மானம் கொண்டுவரப்படும் .புதுச்சேரியில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை அனுமதிக்க முடியாது என தீர்மானம் நிறைவேற்றப்படும் . அஞ்சல் துறையில் உதவியாளர்களை நியமிக்கும் தேர்வில் தமிழை புறக்கணித்து, பொதுமக்களின் விருப்பதிற்கு எதிராக இந்தி மொழியை திணிக்க வேண்டாம். இந்தியை திணிப்பதை விட்டுவிட்டு மாநில மொழிகளுக்கு மத்திய அரசு முக்கியத்துவம் தர வேண்டும் என்று தெரிவித்தார்.
முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், இந்தியா முழுவதும் இந்தி இருக்கட்டும்; தமிழகத்தில் தமிழ் மட்டுமே இருக்க முடியும். நாடுமுழுவதும் குழந்தைகளுக்கு தமிழ் கற்றுக்கொடுக்க கூறியுள்ளார் பிரதமர் மோடி. அரசு பள்ளிகள் குறித்து வெள்ளை அறிக்கையை தமிழக அரசு வெளியிட வேண்டும் . நாடு முழுவதும் உள்ள நதிநீர் பிரச்சனைகளுக்கு தீர்வு காண நதிநீர் தீர்ப்பாயம் அமைக்கப்பட்டு உள்ளது என்று பேசினார்.
அண்மையில் நடைபெற்ற தனது அறக்கட்டளை மூலம் நடந்த நிகழ்ச்சியில் பேசிய நடிகர் சூர்யா, ‘ தமிழகத்தில் 30 சதவீத அரசு பள்ளி மாணவர்கள் ஆசிரியர்களே இல்லாமல் படித்து வருகின்றனர். இவர்கள் எப்படி நீட் தேர்விற்கு தயாராவார்கள். அரசு பள்ளிகளை மூடுவது அங்குள்ள கிராமபுற மாணவர்களின் கல்வியை வெகுவாக பாதிக்கிறது.’ என பேசினார். இதற்கு பாஜக தேசிய தலைவர் எச்.ராஜா கண்டனங்களை பதிவு செய்துள்ளார். அவர் கூறுகையில், ‘ புதிய கல்வி கொள்கை பற்றி நடிகர் சூர்யா எதனையும் […]
அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், தோடர், படுகர் மொழிகளை மீட்டெடுக்கும் பணியை தமிழக அரசு மேற்கொண்டுள்ளது. இரு மொழிகளையும் பாதுகாக்க, ஒரு மில்லியன் டாலர் வழங்குமாறு, யுனெஸ்கோவிடம் உதவி கேட்டுள்ளோம் . தமிழர்களின் தொன்மையான ஓலைச்சுவடி, செப்பேடு, பாறை ஓவியங்கள் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாஃபா பாண்டியராஜன் கூறினார்.
தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், திமுக, விசிக, மதிமுக ஆகிய கட்சிகள் இருக்கும் வரை தமிழகம் வளர்ச்சியடையாது. தமிழகத்திற்கு கிடைக்கும் வளர்ச்சித்திட்டங்கள் அனைத்தையும் இக்கட்சிகள் தடுக்கின்றன. திமுகவிற்கு இப்பொழுதே வேலூர் தேர்தல் குறித்த பயம் ஏற்பட்டுள்ளது. அவர்கள் செய்த பணப்பட்டுவாடாவால் வேலூர் தொகுதியில் மட்டும் தேர்தல் ரத்தானது தலைகுனிவை ஏற்படுத்தியது என்று கூறினார்.
புதிய கல்விக் கொள்கை தொடர்பாக வரும் 25ம் தேதி வரை கருத்துகளை அனுப்பலாம் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. மத்திய மனித வள மேம்பாட்டு துறை அமைச்சகம் புதிய கல்வி வரைவு கொள்கையை வெளியிட்டது.இதில் புதிய கல்விக்கொள்கை வரைவு கொள்கையில் இந்தி பேசாத மாநில பள்ளிகளில் இந்தியை பயிற்றுவிக்க பரிந்துரை செய்தது. இந்தி பேசாத மாநில பள்ளிகளில் இந்தியை பயிற்றுவிக்க பரிந்துரை செய்யப்பட்டதற்கு தமிழகத்தில் மட்டும் அல்லாது சில வட மாநிலங்களிலும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதனால் இந்தி […]
வேலூர் தொகுதிக்கான நாடளுமன்ற தேர்தல் ஆகஸ்ட் 5 ம் தேதி நடைபெற இருக்கிறது. இதற்கான தேர்தல் பிரச்சாரங்கள் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளன. திமுக மற்றும் அதிமுக இடையே கடும் போட்டியாக இந்த தேர்தல் இருக்கிறது. வேலூர் கோட்டை எப்போதும் திமுகவின் வெற்றிக்கோட்டை என்பதை நிரூபிக்கும் வகையில் தொண்டர்கள் அனைவரும் தீவிரமாக களப் பணியாற்ற வேண்டும் என்று தொண்டர்களுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கடிதம் எழுதியுள்ளார். இதை குறிப்பிட்டு பேசிய தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் வேலூர் தொகுதி […]
கர்நாடகா அரசியல் களம் பரபரப்பாக இயங்கி வருகிறது. காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியை சார்ந்த எம்.எல்.ஏக்கள் 16 பேர் செய்தனர் .இதனால் ஆளும் அரசுக்கு கடும் நெருக்கடி ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.எனவே காங்கிரஸ் கட்சி ராஜினாமா செய்த எம்.எல்.ஏக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வந்தது. நேற்று ராஜினாமா செய்த எம்.எல்.ஏக்களில் ஒருவரான நாகராஜ் என்பவரை காங்கிரஸ் மூத்த தலைவரும்,கர்நாடக மாநிலத்தின் நீர்வளத்துறை அமைச்சருமான சிவக்குமார் சந்தித்து பேசினார். இதன் பின்னர் எம்.எல்.ஏ நாகராஜ் கூறுகையில், […]
சென்னை அமைந்தகரை நெல்சன் மாணிக்கம் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையை துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு திறந்து வைத்தார். இதன் பின்னர் துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு பேசுகையில்,சென்னைக்கு வருவது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது இது என்னுடைய ஒரு வீடு. ஒரு நாடு முன்னேற்றப் பாதையில் சென்று கொண்டு இருக்கிறது என்றால் அதில் சுகாதாரத்திற்கு முக்கிய பங்கு உண்டு. தமிழகம் வளர்ந்து கொண்டே வருகிறது. கல்வி, மருத்துவம் என பல்வேறு துறைகளில் தமிழகம் சிறந்து […]
வேலூர் மக்களவை தொகுதிக்கு ஆகஸ்ட் 5 -ஆம் தேதி வாக்குபதிவு நடை பெறுகிறது .வேலூர் மக்களவை தொகுதி திமுக வேட்பாளராக கதிர் ஆனந்த் மீண்டும் போட்டியிடுகிறார். இந்த நிலையில் தொண்டர்களுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார் .அந்த கடிதத்தில், வேலூர் மக்களவை தொகுதி தேர்தலில் களப்பணியாற்றி வேட்பாளரை வெற்றி பெற செய்ய வேண்டும். வேலூர் கோட்டை நமது வெற்றிக்கோட்டை என்பதை நிரூபிக்கும் வகையில் பணியாற்றுங்கள் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.மேலும் வேலூர் தேர்தலில் திமுக வெற்றி, சூழ்ச்சிகளால் […]
அமமுக பொதுச்செயலாளர் தினகரன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில் ,ஜெயலலிதா தொடங்கிய அம்மா மருந்தகங்கள் அடுத்தடுத்து மூடப்படுவதாக வெளியான செய்தி வேதனை அளிக்கிறது. கூட்டுறவு துறை அதிகாரிகளின் அலட்சிய நிர்வாகத்தால் அம்மா மருந்தகங்கள் மூடப்பட்டு வருகின்றது . மூடப்பட்ட மருந்தகங்கள் மீண்டும் செயல்பட உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று அமமுக பொதுச்செயலாளர் தினகரன் தெரிவித்தார்.
அமைச்சர் வேலுமணி செய்தியாளர்களிடம் பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் பேசுகையில்,அரசு பள்ளியில் தேர்ச்சி விகிதம் அதிகரித்து வருவது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. வருங்காலங்களில் 100% தேர்ச்சி சதவீதம் கொண்டுவர வேண்டும் . தமிழகத்தில் இருமொழிக் கொள்கைதான் என முதல்வரும் துணை முதல்வரும் தெரிவித்துள்ளனர். தபால்துறை தேர்வை தமிழில் எழுதுவது தொடர்பாக மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும். அனைத்து இடங்களிலும் தமிழ் மொழிதான் இடம்பெற வேண்டும் என்று அமைச்சர் வேலுமணி தெரிவித்தார்.
தபால்துறை போட்டித் தேர்வுகள் இனி தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் நடத்தப்பட மாட்டாது என்று மத்திய அரசு அறிக்கை வெளியிட்டது. இந்த நிலையில் இது தொடர்பாக தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி செய்தியாளர்களிடம் பேசினார்.அப்பொழுது அவர் கூறுகையில், தபால் துறை தேர்வுகளை இந்தி, ஆங்கிலத்தில் மட்டுமே எழுத வேண்டும் என மத்திய அரசு அறிவித்திருப்பது இந்தி பேசாத மக்கள் மீது தொடுக்கப்பட்ட தாக்குதலாகும்.அஞ்சல்துறை தேர்வை மாநில மொழிகளான தமிழ், ஆங்கிலம், மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் நடத்த […]
மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், நீட் மசோதா குறித்து சட்டத்துறை அமைச்சர், மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் விளக்கம் அளித்துள்ளனர், அரசியல் செய்ய எந்த பிரச்சனையும் இல்லாத்தல் எதிர்கட்சியினர் இதனை கையெடுத்துள்ளனர். நீட் தேவையில்லை என்பது தன் எங்களுடைய நிலைப்பாடு,ஆனால் நீட் வர முக்கிய அடித்தளமாக இருந்தவர்கள் திமுக காங்கிரஸ் தான். முழு பூசணிக்காய் சோற்றில் மறைக்க முடியாது. தமிழக அரசு ஒத்துழைப்பு தரவில்லை என பொன் மாணிக்கவேல் நீதிமன்றத்தில் கூறியுள்ளது குறித்த […]
கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த மேலும் 5 அதிருப்தி எம்எல்ஏக்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். அந்த வழக்கில் தங்களுடைய ராஜினாமா கடிதங்களை ஏற்க சபாநாயகருக்கு உத்தரவிட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 11 எம்.எல்.ஏ க்கள் தங்களது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தனர். இதனால் ஆளும் மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் உறுப்பினர்கள் எண்ணிக்கை குறைந்து ஆட்சி கவிழும் நிலைமை உருவாகியுள்ளது.இந்நிலையில், இவர்கள் அனைவரும் தங்களது ராஜினாமா கடிதத்தை சட்டமன்ற சபாநாயகரிடம் கொடுக்க முன்வந்தனர். அவர்களுள் 5 […]
தமிழ் மொழி மிகவும் இனிமையான மொழி என்று நாட்டின் துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார். தமிழ் மொழியானது உலக மொழிகளில் பழமையான மொழியாக தொன்று தொட்டு விளங்குவதாவும் தெரிவித்துள்ளார். ஒவ்வொரு மாநிலத்தில் இருக்கும் அனைவரும் அவர்களது தாய் மொழியை மறக்காமல் இருக்க வேண்டும் என்றும் வெங்கையா நாயுடு கூறியுள்ளார். அதே போல், தேவையில்லாமல் எந்த மொழியையும் திணிக்க கூடாது என்றும் எந்த மொழியையும் எதிர்க்கக்கூடாது என்றும் தெரிவித்துள்ளார்.
கிகி சேலஞ்ச் , பிட்னெஸ் சேலஞ்ச் வரிசையில் தற்போது ட்ரெண்டிங்கில் உள்ளது பாட்டில் மூடி சேலஞ்ச். ஹாலிவுட் அளவில் அனைவரும் இந்த சேலஞ்சை ஏற்றுக்கொண்டு செய்தனர்.தண்ணீர் நிரம்பிய பாட்டிலில் மூடியை மட்டும் காலால் பேக் சாட் மூலம் தட்டிவிட வேண்டும். இதுவே இந்த சேலஞ்ச் . ஹாலிவுட் அளவில் ஏராளமானோர் செய்து வீடீயோவை இணையத்தில் பதிவு செய்தனர். இந்தியாவில், பாலிவுட் நடிகர்கள் பலரும் செய்தனர். அந்த வரிசையில் மத்திய விளையாட்டு துறை அமைச்சர் கிரேன் ரிஜிஜூ அவர்களும் […]
கர்நாடகா அரசியல் களம் தற்போது பரபரப்பாக இயங்கி வருகிறது. காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியை சார்ந்த எம்.எல்.ஏக்கள் 16 பேர் தங்களது ராஜினாமாவை அளித்தனர்.இதனால் ஆளும் அரசுக்கு கடும் நெருக்கடி ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. இதனால் பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் ராஜினாமா செய்த எம்.எல்.ஏக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் ராஜினாமா செய்த எம்.எல்.ஏக்களில் ஒருவரான நாகராஜ் என்பவரை காங்கிரஸ் மூத்த தலைவரும்,கர்நாடக மாநிலத்தின் நீர்வளத்துறை அமைச்சருமான சிவக்குமார் சந்தித்து பேசினார். […]
நேற்று முன்தினம் மக்களவையில் ரயில்வே பட்ஜெட் துறை சார்பாக விவாதம் நடைபெற்றது. இந்த விவாதம் இரவு 11.55 வரை சென்றதாம். கடந்த 18 ஆண்டுகளில் இவ்வளவு நேரம் விவாதம் நடந்தது இதுவே அதிகம் என மத்திய அமைச்சர் ஒருவர் தெரிவித்தார். தாக்கல் செய்யப்பட்ட ரயில்வே பட்ஜெட் விவாதத்தில் பல அமைச்சர்கள் கலந்து கொண்டனர். தமிழகத்தில் திமுக எம்பி கனிமொழி, மேலும் 100 அமைச்சர்கள் இந்த விவாதத்தில் பேசினர். இதில் எதிர்க்கட்சி எம்பிக்கள் பலர், ‘ ரயில்வே துறையை […]