நான் முதலமைச்சராக தொடர வேண்டாம் என விரும்பினால் நான் பதவி விலக தயார் என மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே அறிவிப்பு. மகாராஷ்டிரா மாநிலத்தில் காங்கிரஸ், சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கட்சிகளை கொண்ட மகா விகாஸ் அகாடி (எம்.வி.ஏ.) கூட்டணியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த வேளையில், மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக ஏக்நாத் சிண்டே உள்ளிட்ட 40 சிவசேனா எம்எல்ஏக்கள் குஜராத்தில் உள்ள ஒரு ஹோட்டலில் முகாமிட்டு போர்க்கொடி தூக்கியுள்ளனர். இதனிடையே, முதல்வர் உத்தவ் […]
சற்று நேரத்தில் அதிமுக பொதுக்குழு தொடர்பான இடைக்கால உத்தரவை பிறப்பிக்கிறது சென்னை உயர்நீதிமன்றம். அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டத்தை நடத்த தடை விதிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது. அதிமுக விதிகளில் திருத்தங்கள் செய்ய தடை விதிக்க வேண்டும் என ராம்குமார் ஆதித்தன், சுரேன், கேசி பழனிசாமி ஆகியோர் மனு தாக்கல் செய்திருந்தனர். மேலும், அதிமுக பொதுக்குழு கூட்டத்துக்கு தடை கோரி பொதுக்குழு உறுப்பினர் சண்முகம் மேல்முறையீடும் செய்திருந்தார். அதன்படி, அதிமுக […]
இன்று இலங்கைக்கு 2ம் கட்டமாக தமிழ்நாட்டில் இருந்து கப்பலில் நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டன. இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், மக்கள் அன்றாடம் பய்னபடுத்தக் கூடிய பொருட்களின் விலை பெரிதளவு உயந்துள்ளது. இதனால்,மக்களின் இயல்புவாழ்க்கை பாதிப்புக்குள்ளாகி உள்ளது. இந்த நிலையில், இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் சிரமப்படும் மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும் அனுப்பி வைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, முதல்கட்டமாக நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து, இன்று இலங்கைக்கு 2ம் […]
பிஜேபியின் ஜனாதிபதித் தேர்வான திரௌபதி முர்மு புதன்கிழமை தனது சொந்த மாநிலமான ஒடிசாவில் உள்ள மயூர்பஞ்ச் மாவட்டத்தில் உள்ள ராய்ராங்பூரில் உள்ள சிவன் கோயிலின் பிரார்த்தனை செய்வதற்கு முன் தரையைத் துடைத்துள்ளார். இந்தியாவின் 15 வது குடியரசுத் தலைவராக ராம்நாத் கோவிந்த் அவர்கள் கடந்த 2017 ஆம் ஆண்டு பதவியேற்ற நிலையில்,அவரின் பதவிக்காலம் வருகின்ற ஜூலை 24 ஆம் தேதியுடன் முடிவடைகிறது.இதனால்,அடுத்த குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் ஜூலை 18 ஆம் தேதி நடைபெறுவுள்ளது. குடியரசுத் தலைவர் […]
கொள்கைகளை உருவாக்குவது உள்ளிட்ட அனைத்திற்கும் பொதுக்குழுவுக்கே அதிகாரம் உள்ளது என ஈபிஎஸ் தரப்பு வாதம். அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டத்தை நடத்த தடை விதிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது. அதிமுக விதிகளில் திருத்தங்கள் செய்ய தடை விதிக்க வேண்டும் என ராம்குமார் ஆதித்தன், சுரேன், கேசி பழனிசாமி மனுவில் கோரிக்கை வைத்திருந்தனர். அதிமுக பொதுக்குழு கூட்டத்துக்கு தடை கோரி பொதுக்குழு உறுப்பினர் சண்முகம் மேல்முறையீடும் செய்திருந்தார். அதன்படி, அதிமுக பொதுக்குழுவுக்கு […]
23 வரைவு தீர்மானங்களை தவிர வேறு எந்த அஜெண்டாவையும் அனுமதிக்க முடியாது என நீதிமன்றத்தில் ஓபிஎஸ் தரப்பு வாதம். அதிமுக பொதுக்குழுவுக்கு, கட்சி விதிகளை திருத்துவதற்கு தடை கோரியும் கட்சி உறுப்பினர்கள் ராம்குமார் ஆதித்தன்,சுரேன் பழனிச்சாமி தாக்கல் செய்த வழக்கு உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. ஈபிஎஸ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், பொதுகுளுதான் கட்சியின் உச்சபட்ச அமைப்பு, பொதுக்குழுவுக்கே உள்ளது. பொதுக்குழுவில் இது நடக்கும், இது நடக்காது என உத்தரவாதம் அளிக்க முடியாது. நாளை கட்சி சட்ட விதிகளில் […]
தமிழைப் பின்னுக்குத் தள்ளி, ஆங்கிலத்தை உயர்த்திப் பிடிப்பதுதான் இவர்களது திராவிட மாடல் ஆட்சி! வெட்கக்கேடு! என சீமான் ட்வீட். 10 மற்றும் 12 ஆம் வகுப்புப் பொதுத்தேர்வு முடிவுகளை வெளியிடும்போது பாடங்களின் பெயர்களை தமிழில் குறிப்பிடாததற்கு கண்டனம் தெரிவித்து சீமான் ட்வீட் செய்துள்ளார். அந்த ட்விட்டர் பதிவில், ’10 மற்றும் 12 ஆம் வகுப்புப் பொதுத்தேர்வு முடிவுகளை வெளியிடும்போது பாடங்களின் பெயர்களை தமிழில் குறிப்பிடாததும், தமிழ் மொழிப்பாடத்தை வெறுமனே மொழிப்பாடமென்று மட்டும் பதிவுசெய்திருப்பதும் கண்டனத்திற்குரியது. ‘எங்கும் தமிழ்! […]
நாளை நடக்கவுள்ள அதிமுக பொதுக்குழுவில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பு பங்கேற்க முடிவு எடுத்துள்ளதாக அவருடன் நடத்திய ஆலோசனைக்கு பிறகு துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் தகவல் அளித்துள்ளார். அதிமுக பொதுக்குழு,செயற்குழு கூட்டம் நாளை வானகரம்,ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி பேலசில் நடைபெறவுள்ளது. இதனிடையே,அதிமுகவில் ஒற்றைத் தலைமை குறித்த பிரச்சனை தொடரும் நிலையில்,ஓபிஎஸ்,ஈபிஎஸ் என இரு அணிகளாக செயல்பட்டு வருகின்றனர்.எனினும்,ஈபிஎஸ்ஸை சந்தித்து கட்சி நிர்வாகிகள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.குறிப்பாக, ஓபிஎஸ் ஆதரவு மாவட்ட செயலாளர்கள்,நிர்வாகிகளும் ஈபிஎஸ்க்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பாக செய்தியாளர்களுக்கு […]
காவிரியில் மேகதாது அணையை கட்டுவதற்கு கர்நாடகா அரசு தொடர்ந்து முயன்று வரும் நிலையில்,இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்குகள் நிலுவையில் உள்ளது என்றும்,மேகதாது அணை குறித்து காவிரி மேலாண்மைக் கூட்டத்தில் விவாதிக்கக் கூடாது என்றும் பிரதமர் மோடிக்கு அண்மையில் முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார். இதனைத் தொடர்ந்து,தஞ்சை கல்லணையில் ஆய்வு செய்த பின்னர் காவிரி மேலாண்மை ஆணையத்தின் குழு தலைவர் ஹல்தர் செய்தியாளர்களிடம் கூறுகையில்:”மேகதாது உள்ளிட்ட அணை விவகாரங்கள் குறித்து விவாதிக்க காவிரி நீர் மேலாண்மை ஆணையத்திற்கு முழு […]
அதிமுகவில் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு அதிகரித்து வரும் நிலையில், ஜெயலலிதா நினைவிடம் செல்ல ஓபிஎஸ் திட்டம். சென்னை மெரினாவில் கடற்கரையில் உள்ள மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா நினைவிடத்திற்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் செல்லவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிமுகவின் உட்கட்சி மோதல் அதிகரித்துள்ள நிலையில், ஜெயலலிதா நினைவிடம் செல்ல ஓபிஎஸ் திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. நாளை அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டம் நடைபெற இருக்கும் நிலையில், எடப்பாடி பழனிசாமிக்கு பெரும்பாலான மாவட்ட செயலாளர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். […]
அதிமுக பொதுக்குழு,செயற்குழு கூட்டம் நாளை வானகரம்,ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி பேலசில் நடைபெறவுள்ளது. இதனிடையே,அதிமுகவில் ஒற்றைத் தலைமை குறித்த பிரச்சனை தொடரும் நிலையில்,ஓபிஎஸ்,ஈபிஎஸ் என இரு அணிகளாக செயல்பட்டு வருகின்றனர்.எனினும்,ஈபிஎஸ்ஸை சந்தித்து கட்சி நிர்வாகிகள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.குறிப்பாக, ஓபிஎஸ் ஆதரவு மாவட்ட செயலாளர்கள்,நிர்வாகிகளும் ஈபிஎஸ்க்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.இதனால் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அணி வலுப்பெற்று வருகிறது.அதிமுகவில் ஒற்றை தலைமை கோரிக்கை தீவிரமடைந்து வரும் நிலையில் ஈபிஎஸ்க்கான ஆதரவு அதிகரித்துள்ளது. இதனைத் தொடர்ந்து,அதிமுக பொதுக்குழு,செயற்குழு கூட்டத்தில் இரட்டைத் தலைமைக்காக […]
அதிமுகவில் தற்போது ஒற்றைத் தலைமை பிரச்னை பெரும் பூதாகரமாக வெடித்துள்ளது.இதனால்,ஓபிஎஸ்,ஈபிஎஸ் தங்களது ஆதரவு மாவட்ட செயலாளர்கள்,நிர்வாகிகளுடன் தனித்தனியே ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர். இந்த பரபரப்பான சூழலில்,சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அம்மா நினைவிடம் சென்ற அதிமுக தொண்டர்கள் சிலர் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ்-க்கு ஆதரவாக கோஷமிட்டும்,கட்சி பொதுச்செயலாளர் பதவிக்கு ஈபிஎஸ் தகுதியானவர் அல்ல என்றும்,குறிப்பாக,அம்மா மட்டுமே நிரந்தர பொதுச் செயலாளர் என்றும் முழக்கமிட்டனர்.அப்போது,முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவிடம் அருகே தொண்டர்களில் ஒருவர் பெட்ரோலை ஊற்றி தற்கொலைக்கு முயன்றார்.ஆனால்,உடனே அருகில் […]
அதிமுகவில் ஒற்றை தலைமை கோரிக்கை தீவிரமடைந்து வரும் நிலையில் எடப்பாடி பழனிசாமிக்கான ஆதரவு அதிகரிப்பு. அதிமுகவில் ஒற்றை தலைமை குறித்த பிரச்சனை தொடரும் நிலையில், ஓபிஎஸ், ஈபிஎஸ் என இரு அணிகளாக செயல்பட்டு வருகின்றனர். இந்த நிலையில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் தீவிர ஆதரவாளரான அதிமுக மாவட்ட செயலாளர் அசோக், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி அணிக்கு மாறினார். சென்னை தெற்கு, கிழக்கு மாவட்ட செயலாளர் அசோக், சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள இல்லத்தில் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து […]
மகாராஷ்டிரா மாநிலத்தில் காங்கிரஸ்,சிவசேனா,தேசியவாத காங்கிரஸ் கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது.இந்த வேளையில், மகாராஷ்டிரா மாநில முதல்வருக்கு எதிராக ஏக்நாத் சிண்டே உள்ளிட்ட 40 சிவசேனா எம்எல்ஏக்கள் குஜராத்தில் உள்ள ஒரு ஹோட்டலில் முகாமிட்டு போர்க்கொடி தூக்கியுள்ளனர். இதனிடையே,முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையிலான அரசை கவிழ்த்து,தங்களது ஆட்சியை அமைக்க பாஜக தீவிரம் காட்டி வருகிறது.அந்த வகையில்,மகாராஷ்டிரா மாநிலத்தில் ஆட்சியமைக்க தேவையான எம்எல்ஏக்களின் ஆதரவை திரட்டும் முயற்சியில் பாஜக ஈடுபட்டு வருவதாக கூறப்பட்ட நிலையில்,ஆட்சியைக் கவிழ்க்கும் பாஜகவின் முயற்சி […]
அதிமுக பொதுக்குழு கூட்டத்துக்கு தடை தடை கோரிய வழக்கை பிற்பகல் 3 மணிக்கு விசாரிக்கிறது சென்னை உயர் நீதிமன்றம். அதிமுக பொதுக்குழுவுக்கு தடை கோரிய வழக்கு விசாரணை பிற்பகல் 3 மணிக்கு நடைபெறும் என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டத்தை நடத்த தடை விதிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது. அதிமுக விதிகளில் திருத்தங்கள் செய்ய தடை விதிக்க ராம்குமார் ஆதித்தன், சுரேன், கேசி பழனிசாமி […]
அதிமுக செயற்குழு – பொதுக்குழுவில் நிறைவேற்றப்படும் தீர்மானங்கள் ஓ.பன்னீர்செல்வத்தின் ஒப்புதலுக்காக ஒப்படைப்பு. அதிமுக பொதுக்குழு, செயற்குழுவில் நிறைவேற்றப்பட உள்ள 23 தீர்மானங்கள் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்திடம் ஒப்படைக்கப்பட்டதாக தகவல் கூறப்படுகிறது. ஓ.பன்னீர்செல்வத்தின் ஒப்புதலுக்காக 23 தீர்மானங்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளன. தீர்மானக்குழு ஓபிஎஸ்ஸிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள தீர்மானத்தில் ஒற்றை தலைமை குறித்த தகவல் எதுவும் இடம்பெறவில்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலையில், ஒப்புதலுக்காக அதிமுக ஒருங்கிணைப்பாளரிடம் தீர்மானங்கள் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில், திட்டமிட்டபடி நாளை பொதுக்குழு, செயற்குழு கூடுவதாக தகவல் கூறப்படுகிறது. மேலும், ஒருங்கிணைப்பாளரும், […]
அதிமுக பொதுக்குழு,செயற்குழு கூட்டமானது சென்னை வானகரம்,ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி பேலசில் நாளை நடைபெறவுள்ளது.இதனிடையே, அதிமுகவில் ஒற்றைத் தலைமை பிரச்சனை வெடித்துள்ளது.இதனால்,இரு தரப்பினருக்கும் இடையே முரண்பாடுகள் உள்ளதால் அசம்பாவிதம் ஏற்பட வாய்ப்பு உள்ளதாகவும்,கழகத் தொண்டர்கள் மற்றும் பொதுமக்களின் நலன் கருதி சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டிய கடமை காவல் துறைக்கு உள்ளது என்றும் கூறி,பொதுக்குழுவுக்கு அனுமதி தரக்கூடாது என்று கூறி ஓபிஎஸ் கையெழுத்துடன் கூடிய மனு ஆவடி காவல் ஆணையரகத்தில் நேற்று கொடுக்கப்பட்டது. இந்நிலையில்,ஓபிஎஸ் கோரிக்கையை ஆவடி காவல்துறை நிராகரித்துள்ளது.பொது […]
காவிரியில் மேகதாது அணையை கட்டுவதற்கு கர்நாடகா அரசு தொடர்ந்து முயன்று வரும் நிலையில்,இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்குகள் நிலுவையில் உள்ளது என்றும்,மேகதாது அணை குறித்து காவிரி மேலாண்மைக் கூட்டத்தில் விவாதிக்கக் கூடாது என்றும் பிரதமர் மோடிக்கு அண்மையில் முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார். இதற்கிடையில்,தஞ்சை கல்லணையில் ஆய்வு செய்த பின்னர் காவிரி மேலாண்மை ஆணையத்தின் குழு தலைவர் ஹல்தர் செய்தியாளர்களிடம் கூறுகையில்:”மேகதாது உள்ளிட்ட அணை விவகாரங்கள் குறித்து விவாதிக்க காவிரி நீர் மேலாண்மை ஆணையத்திற்கு முழு அதிகாரம் […]
தற்போது அதிமுகவில் ஒற்றைத் தலைமை பிரச்னை பெரும் பூதாகரமாக வெடித்துள்ளது.இதனால்,ஓபிஎஸ்,ஈபிஎஸ் தங்களது ஆதரவு மாவட்ட செயலாளர்கள்,நிர்வாகிகளுடன் தனித்தனியே ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.இதனைத் தொடர்ந்து,சென்னையில் நாளை நடைபெறவுள்ள அதிமுக பொதுக்குழு,செயற்குழு கூட்டத்தில் இரட்டைத் தலைமைக்காக உருவாக்கப்பட்ட விதிமுறைகளை நீக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக,எம்ஜிஆர்,ஜெயலலிதா பின்பற்றிய விதிமுறைகளை பின்பற்றி நாளை ஒற்றைத் தலைமை தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளதாகவும், ஒற்றைத் தலைமையாக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த பரபரப்பான சூழலில்,சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அம்மா நினைவிடம் […]
தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் கடந்த 2017 ஆம் ஆண்டு அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர்,இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் உருவாக்கப்பட்டது.அப்போது பொதுச்செயலாளரின் அதிகாரங்கள் ஒருங்கிணைப்பாளர்,இணை ஒருங்கிணைப்பாளரருக்கு பகிர்ந்தளிக்கப்பட்டன. ஆனால்,தற்போது அதிமுகவில் ஒற்றைத் தலைமை பிரச்னை பெரும் பூதாகரமாக வெடித்துள்ளது.இதனால்,ஓபிஎஸ்,ஈபிஎஸ் தங்களது ஆதரவு மாவட்ட செயலாளர்கள்,நிர்வாகிகளுடன் தனித்தனியே ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில்,சென்னை வானகரம்,ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி பேலசில் நாளை நடைபெறவுள்ள அதிமுக பொதுக்குழு,செயற்குழு கூட்டத்தில் இரட்டைத் தலைமைக்காக உருவாக்கப்பட்ட விதிமுறைகளை நீக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.குறிப்பாக,எம்ஜிஆர், ஜெயலலிதா பின்பற்றிய […]