தமிழக வேளாண்மைத்துறை அமைச்சர் இரா.துரைக்கண்ணு அக் 31ந்தேதி காலமானார்.மறைந்த அமைச்சர் தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் சட்டமன்ற தொகுதியில் இருந்து சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர். அவர் மறைவைத் அடுத்து அத்தொகுதி தொகுதி காலியாகிவிட்டது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை சபாநாயகர் ப.தனபால் வெளியிட்டுள்ளார். சபநாயகரின் இந்த அறிவிப்பை தொடர்ந்து தமிழகத்தில் இதனுடன் 4 தொகுதிகள் காலியாக உள்ளது விவரங்கள்:-கடந்த பிப்ரவரி மாதம் திருவொற்றியூர் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. கே.பி.பி.சாமி, மற்றும் குடியாத்தம் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. காத்தவராயன் ஆகியோர் மரணம் அடைந்தனர். […]
கூட்டணி என்பது என் வேலை என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அனைத்து கட்சிகளுமே யாருடன் கூட்டணி வைத்துக் கொள்வது என்றும் தனித்து போட்டியிடுவதா? என தற்பொழுது பேச்சுவார்த்தைகளை நடத்த தொடங்க விட்டன. இந்நிலையில் சட்டமன்றத் தேர்தலுக்கு ஆயத்தமாவது குறித்து மக்கள் நீதி மய்யத்தின் மாவட்ட செயலாளர்களின் கூட்டம் இன்று தொடங்கியது.இந்த கூட்டம் 2 நாட்கள் தொடங்கியது.இந்த கூட்டத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் […]
தமிழகத்தில் காங்கிரஸ் சார்பில் நடைபெறும் ஏர் கலப்பை பேரணியில் ராகுல் காந்தி பங்கேற்கிறார். நாட்டின் வளர்ச்சி, விவசாயிகள் மேம்பாட்டுக்காக ஏர்கலப்பை பேரணிகள் விரைவில் நடத்தப்படும் என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியிருந்தார்.தமிழகத்தில் காங்கிரஸ் சார்பில் நடைபெறும் ஏர் கலப்பை பேரணியில் ராகுல் காந்தி பங்கேற்கிறார் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பாக தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில்,தமிழகம் முழுவதும் நடைபெறும் ஏர் கலப்பை ஊர்வலங்களின் இறுதியில் மாநில […]
எனது அரசியல் நிலைப்பாட்டை பற்றி மக்களுக்கு தெரிவிப்பேன் என ரஜினிகாந்த கூறிய நிலையில்,அவரை துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி சந்தித்து பேசியுள்ளார். ஆண்டுதோறும் நடிகர் ரஜினிகாந்த் , ரசிகர்களை தனது சொந்த மண்டமான ராகவேந்திரா மண்டபத்தில் சந்திப்பார். கடந்த 2017 -ஆம் ஆண்டு நடைபெற்ற சந்திப்பில் ரஜினி அறிவித்தது : இதன் ஒரு சந்திப்பாக கடந்த 2017 -ஆம் ஆண்டு ரஜினி தனது ரசிகர்களை சந்தித்து முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.அதாவது தனிக்கட்சி ஆரம்பித்து சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட […]
மாவட்ட செயலாளர்களுடன் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் ஆலோசனை மேற்கொண்டார். தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அனைத்து கட்சிகளுமே யாருடன் கூட்டணி வைத்துக் கொள்வது என்றும் தனித்து போட்டியிடுவதா? என தற்பொழுது பேச்சுவார்த்தைகளை நடத்த தொடங்க விட்டன. இந்நிலையில் சட்டமன்றத் தேர்தலுக்கு ஆயத்தமாவது குறித்து மாவட்ட செயலாளர்களுடன் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் ஆலோசனை மேற்கொண்டார்.
50% இடஒதுக்கீட்டை அதிமுக அரசு மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மருத்துவ உயர்சிறப்புப் படிப்புகளில் அரசு மருத்துவர்களுக்கு 2016-ஆம் ஆண்டிற்கு முன்பிருந்த இடஒதுக்கீட்டு முறையில் இந்தக் கல்வியாண்டிலேயே இடங்கள் வழங்கப்பட வேண்டும் என்று மருத்துவர்கள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இது தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்,“உச்சநீதிமன்றத் தீர்ப்பினை மேற்கோள்காட்டி, அரசு மருத்துவர்களுக்கு 2016க்கு முன்புவரை கடைப்பிடிக்கப்பட்ட 50% இடஒதுக்கீட்டை அதிமுக அரசு மீண்டும் அமல்படுத்த வேண்டும்”.இந்த ஆண்டு அரசு […]
பாஜகவை தேர்தலில் தோற்கடிக்க முடியும் என்று எதிர்க்கட்சிகள் உறுதியாக நம்பவேண்டும் என்று ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். பீகார் சட்டப்பேரவைத் தேர்தல் 3 கட்டமாக நடைபெறும் என்று இந்திய தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்தது.அதன்படி ,முதல் கட்டமாக 71 தொகுதிகளுக்கு கடந்த அக்டோபர் 28-ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. 2வது கட்டமாக 94 தொகுதிகளுக்கு நாளை (நவம்பர் 3 -ஆம் தேதி )தேர்தல் நடைபெறுகிறது. இந்நிலையில் காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவுகளை பதிவிட்டுள்ளார்.அவரது பதிவில்,2019 […]
இஸ்லாமிய நாடுகளில் வசிக்கும் பிரான்ஸ் மக்கள் பாதுக்காப்பாக இருக்க பிரான்ஸ் அதிபர் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து பிரான்ஸ் அதிபர் இம்மானுவல் மேக்ரான் இந்தோனியா, வங்காளதேசம்,ஈராக்,மற்றும் வடக்கு ஆப்பிரிக்க நாடான மூர்த்தானியா ஆகிய இஸ்லாமிய நாடுகளில் வசிக்கும் பிரான்ஸ் மக்கள் தங்கள் பாதுகாப்பாக இருக்கங்கள் என்றும் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வலியுறுத்தியுள்ளார். மேலும் பயணங்கள் மேற்கொள்ளும் போது மிக கவனத்தோடு இருக்கவும் அதிபர் வேண்டுகோள் விடுத்துள்ளார். பிரெஞ்சு பள்ளி ஒன்றில் ஓவிய பெண்ஆசிரியர் சாமுவேல் பட்டி முகமது […]
இந்து மத உணர்வுகளை புண்படுத்தும் காட்சிகள் அமைத்ததாக இயக்குனர் ராஜமவுலிக்கு பா.ஜ.க. எச்சரிக்கை விடுத்துள்ளது. தெலுங்கில் பிரபல இயக்குநராக வலம்வருபவர் ராஜமவுலி திரைபடைப்பில் தனிக்கென்று தனிபாணியை உருவாக்கி அசுர வெற்றி பெற்றவர்.இவரது படைப்பில் உருவான பாகுபலி மிக பிரம்மாண்ட வெற்றி பெற்று, பெருமளவு வசூலை குவித்து சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தற்போது ராஜமௌலி ஆர்.ஆர்.ஆர். என்ற படத்தை இயக்கி வருகிறது. இப்படத்தில் பழங்குடியின மக்களின் தெய்வமாக போற்றப்படும் கொமரம் பீம் தலையில் தொப்பி வைத்திருப்பது போன்ற […]
70 ஆண்டுகளுக்கு பிறகு ஜம்முவில் மன்சார் ஏரி சீரமைக்கப்பட்டு 20 லட்ச சுற்றுலா பயணிகளை ஈர்க்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜம்முவில் உள்ள மன்சார் ஏரி வளர்ச்சித் திட்டத்தை, மத்திய வடகிழக்கு பிராந்தியங்களுக்கான இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் பேசிய.ஜிதேந்திர சிங் மன்சார் பகுதி மக்களுக்கு இன்றைய நாள் ஒரு வரலாற்று சிறப்பு மிக்க நாளாகும். 70 ஆண்டுகால காத்திருப்புக்குப் பின் மன்சார் ஏரி வளர்ச்சித்திட்டம் நிறைவேற்றப்பட்டு வருகிறது. கடந்த 6 […]
உத்தரப்பிரதேச மாநிலத்தில சகோதரிகளின் வாழ்க்கையில் விளையாடும் கயவர்களுக்கு இறுதி ஊர்வலம் நடத்தப்படும் என்றும் லவ் ஜிகாத்தைத் தடுப்பதற்கும் கடும் சட்டம் கொண்டுவரப்பட உள்ளது என்று முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். லக்னோ ஜூனாபூரில் இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய முதல்வர் யோகி ஆதித்யநாத் மாநிலத்தில் லவ் ஜிகாத்துக்கு எதிராகவும் கடும் சட்டம் இயற்றப்படும் என்றும் எங்கள் சகோதரிகளின் அடையாளத்தையும், மாண்பையும் குலைக்கின்ற் வகையில் செயல்படுபவர்களுக்கு இறுதி ஊர்வல் நடத்தப்படும் என்று எச்சரிக்கை விடுக்கிறேன் என்று தெரிவித்தார். மேலும் […]
பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழாவில் திருநீறு பூச மறுத்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பகீரங்க மன்னிப்பு கேட்க வேண்டுமென முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் எம்.எல்.ஏ வலியுறுத்தியுள்ளார். கோவையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த கருணாஸ் 1968ல் குன்றக்குடி அடிகளார் திருநீறு பூசுகையில் அதை ஏற்றுக்கொண்டதுடன், மரியாதை செலுத்தியதை அவமதிப்பது நாகரிகமாக இருக்காது என பெரியார் கூறினார். திராவிடர் கழகத்தின் வழியில் வந்த அக்கட்சியின் தலைவரான மு.க.ஸ்டாலின் ஒரு நாத்திகராக இருக்க வேண்டும் இல்லை ஆத்திகராக இருக்க […]
புதிய வேளாண் சட்டங்கள் நாட்டின் அஸ்திவாரத்தையே பலவீனமாக்கிவிட்டது என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். . இது குறித்து கூறிய ராகுல் காந்தி மத்திய அரசு கொண்டுவந்திருக்கும் புதிய வேளாண் சட்டங்கள் அனைத்தும் நாட்டின் அஸ்திவாரத்தை பலவீனமாக்கும். எனவே விவசாயிகள் நலன் கருதி அச்சட்டங்களை பிரதமர் மோடி மறுபரிசீலனை செய்யவேண்டும். கொரோனாப் பரவலில் நாடு கடினமான சூழல்களை சந்தித்துவரும் வேளையில், சமூகத்தின் எளிய பிரிவினரான விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள், சிறுதொழில்புரிவோர்கள், பெண்கள், இளைஞர்கள் உள்ளிட்ட […]
பிரச்சாரம் நேற்று மாலையுடன் முடிந்தது.நாளை பீகாரில் 2-ம் கட்ட தேர்தல் நடைபெறுகிறது. பீகாரில் நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதாதளம் பா.ஜனதா கூட்டணி ஆட்சி முடிவடையும் சூழலில் அம்மாநில சட்டசபைக்கு 3 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. அதன்படி முதல் கட்ட தேர்தல் அக்., 28ந் தேதி நடந்து முடிந்தது. 2ம் கட்ட தேர்தல், நாளை நடைபெற உள்ளது.2ம்கட்ட தேர்தலுக்காக கடந்த சில நாட்களாகவே சூறாவளி பிரசாரத்தினை கட்சிகள் நடத்தி வந்த நிலையில் நேற்று மாலையுடன் பிரச்சாரங்கள் முடிவடைந்தது. இந்நிலையில் […]
மக்களுக்கு எதிராக செயல்படுவோரை நாயாக தாக்குவேன் என்று ஜோதிராதித்ய சிந்தியா பதிலடி கொடுத்துள்ளார். மத்தியப் பிரதேசத்தில் 28 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு நவம்பர் 3ந்தேதி இடைத் தேர்தல் நடைபெறுகிறது.இந்நிலையில் அங்கு பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் சூறாவளிப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பிரச்சாரத்தின் போது தாப்ரா தொகுதியில் போட்டியிடும் மாநில அமைச்சரும், பாஜக வேட்பாளருமான இமர்தி தேவியை கமல்நாத் அவதூறாக பேசியதாக சர்ச்சை வெடித்தது.இதனால் கமல்நாத்தின் கருத்துக்கு பல்வேறு தரப்பிலிருந்து கடும் கண்டனங்கள் எழுந்த நிலையில் கமல்நாத் மீது […]
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள கில்கிட்-பல்டிஸ்தான் பகுதிகளுக்கு பாகிஸ்தான் மாகாண அந்தஸ்து வழப்படும் என்று அறிவித்துள்ளார். பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான், இந்தியாவின் காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் ஒரு பகுதியான பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் இருக்கும் கில்கிட் பகுதிக்குச் சென்றார். அங்கு கில்கிட்-பல்டிஸ்தான் பகுதிகளுக்கு தற்காலிகமாக பாகிஸ்தான் மாகாண அந்தஸ்து வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இம்ரான் கானின் இந்த அறிவிப்பிற்கு இந்தியா சார்பில், கடும் எதிர்ப்பு தெரிக்கப்பட்டுள்ளது. இது குறித்த கேள்விக்கு பதிலளித்த […]
பீகார் மாநிலத்தில் நடந்து வரும் நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதாதளம் மற்றும் பாரதிய ஜனதா கட்சி கூட்டணி ஆட்சி தற்போது முடிவடைவதால், அம்மாநில சட்டசபைக்கு 3 கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. ஏற்கனவே கடந்த 28-ந் தேதி முதல் கட்ட தேர்தல் நடந்தது. தற்போது 2-ம் கட்ட தேர்தல், நாளை செவ்வாய்க்கிழமை நடக்கிறது. இதையொட்டி, கடந்த சில நாட்களாக தீவிரமாக நடந்து வந்த பிரசாரம் நேற்று மாலையுடன் முடிந்தது.தேர்தல் பிரசாரத்தின் இறுதி நாளான நேற்று பிரதமர் மோடி 4 […]
ஜோதிராதித்யா சிந்தியா பிரசாரத்தின்போது பாஜகவுக்குப் பதில் தவறுதலாக காங்கிரஸ் கட்சிக்கு வாக்கு சேகரித்துள்ள வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. மத்திய பிரதேசத்தில் மூத்த காங்கிரஸ் தலைவர் ஜோதிராதித்யா சிந்தியாவிற்கும் கமல்நாத்திற்கும் இடையே பனிப்போர் நிலவி வந்தது. இதற்கு இடையில் மத்தியபிரதேச காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜோதிராதித்யா சிந்தியா டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார் .ஜோதிராதித்யா சிந்தியா காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு ராஜினாமா கடிதத்தை அனுப்பினார்.இவரது ராஜினாமாவை காங்கிரஸ் கட்சியும் […]
அமைச்சர் துரைக்கண்ணுவின் உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. தமிழக வேளாண் துறை அமைச்சர் துரைக்கண்ணு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் நேற்று இரவு காலமானார்.அமைச்சரின் மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்தனர்.மேலும் நேரிலும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இதன் பின்பு அமைச்சர் துரைக்கண்ணு உடல் சென்னையில் இருந்து சொந்த ஊரான தஞ்சை ராஜகிரிக்கு வந்தடைந்தது. வன்னியடி கிராமத்தில் உள்ள துரைக்கண்ணுவின் உடல் மக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.அமைச்சர் துரைக்கண்ணுவின் உடலுக்கு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் […]
அமைச்சர் துரைக்கண்ணு உடல் சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு வந்தடைந்துள்ளது. தமிழக வேளாண் துறை அமைச்சர் துரைக்கண்ணு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் நேற்று இரவு காலமானார்.எனவே அமைச்சரின் மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.மேலும் நேரிலும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் அமைச்சர் துரைக்கண்ணு உடல் சென்னையில் இருந்து சொந்த ஊரான தஞ்சை ராஜகிரிக்கு வந்தடைந்தது. வன்னியடி கிராமத்தில் உள்ள துரைக்கண்ணுவின் உடல் மக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.பின்பு அமைச்சருக்கு இறுதி சடங்கு நடைபெறவுள்ளது.