ஆவின் ஊழியர்களின் கோரிக்கைகளும் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும். – அமைச்சர் மனோ தங்கராஜ்

manothangaraj

ஆவின் நிறுவனத்தில் உள்ள பல சவால்களை ஒவ்வொன்றாக சரி செய்து வருகிறோம் என அமைச்சர் மனோ தங்கராஜ் பேட்டி. 

பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் அவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது பேசிய அவர், ஏப்ரல் மாதத்தை விட 3 லட்சம் லிட்டர் பால் கூடுதலாக இன்று கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

இன்று 30.80 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது;
விவசாயிகள் மட்டுமின்றி 30,000 ஆவின் ஊழியர்களின் கோரிக்கைகளை பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஆவின் நிறுவனத்தில் உள்ள பல சவால்களை ஒவ்வொன்றாக சரி செய்து வருகிறோம் என தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்