புனரமைக்கப்பட்ட ஹாக்கி ஆடுகளத்தை திறந்து வைத்த முதல்வர்…!

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை ராதாகிருஷ்ணன் மைதானத்தில் மேம்படுத்தப்பட்ட ஹாக்கி விளையாட்டரங்கத்தை திறந்து வைத்தார்.
சென்னை ராதாகிருஷ்ணன் மைதானத்தில் மேம்படுத்தப்பட்ட ஹாக்கி விளையாட்டரங்கத்தை தமிழக முதல்வர் திறந்து வைத்தார். ஒலிம்பிக் தரத்திலான செயற்கை இலை மைதானம், கலைஞர் நூற்றாண்டு பார்வையாளர் மாடத்தையும் முதல்வர் திறந்து வைத்தார். இந்த நிகழ்வில் உதயநிதி ஸ்டாலின், சென்னை மேயர் பிரியா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தயாராகும் வகையில் சர்வதேச தரத்திலான ஹாக்கி மைதானம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. 7-வது ஆசிய ஆடவர் ஹாக்கி கோப்பை போட்டிகள் சென்னையில் ஆகஸ்ட் 3ஆம் தேதி முதல் 12 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. 16 ஆண்டுகளுக்கு பின் சென்னையில் நடக்கும் போட்டியை ஹாக்கி இந்தியாவுடன் தமிழக அரசு இணைந்து நடத்துகிறது.
இந்த போட்டிகளை நடத்த தமிழக அரசு ரூ.17 கோடி ஒதுக்கி அதில் ரூ.12 கோடி ஹாக்கி இந்தியாவிடம் தரப்பட்டுள்ளது. இந்த போட்டிகளில், இந்தியா, சீனா, பாகிஸ்தான், மலேசியா, ஜப்பான், கொரியா ஆகிய ஆறு நாடுகளின் அணிகள் கலந்து கொள்கின்றன.
லேட்டஸ்ட் செய்திகள்
‘மாரீசன்’ படம் எப்படி இருக்கு? டிவிட்டர் விமர்சனம் இதோ!
July 24, 2025