குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.2,000 வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்த கர்நாடக முதல்வர்…!

கர்நாடகாவில் குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.2,000 வழங்கும் கிரகலட்சுமி திட்டத்தை கர்நாடக முதல்வர் சித்தராமையா தொடங்கி வைத்தார்.
கர்நாடகாவில் சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி மிகப்பெரிய அளவிலான வெற்றியை பெற்றது. இந்த நிலையில், காங்கிரஸ் கட்சி அளித்த தேர்தல் வாக்குறுதியில் மிக முக்கியமானதாக கருதப்பட்டது மாதந்தோறும் குடும்ப தலைவிக்கு ரூ.2000 வழங்கும் திட்டம் ஆகும்.
காங்கிரஸ் தலைமையிலான அரசு ஆட்சிக்கு வந்தவுடன் கர்நாடக அமைச்சரவை இத்திட்டத்திற்கு ஒப்புதல் அளித்தது. இதனை தொடர்ந்து, இன்று கர்நாடகாவில் குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.2,000 வழங்கும் கிரகலட்சுமி திட்டத்தை கர்நாடக முதல்வர் சித்தராமையா தொடங்கி வைத்தார்.
கர்நாடகா அரசாங்கத்தின் கூற்றுப்படி, இந்த திட்டம் மாநிலத்தில் கிட்டத்தட்ட 12.8 மில்லியன் குடும்பங்கள் பயனடையும். தகுதியுள்ள பெண்கள் சேவா சிந்து உத்தரவாதத் திட்டத்தின் அதிகாரப்பூர்வ போர்ட்டலுக்குச் சென்று இரண்டையும் ஆன்லைனில் பதிவு செய்யலாம். ஆஃப்லைனில் பதிவு செய்ய, விண்ணப்பதாரர்கள் தங்கள் பகுதியில் உள்ள ஒதுக்கப்பட்ட மையத்திற்குச் செல்ல வேண்டும். எந்தவொரு கட்டணமும் செலுத்தாமல் மையங்களில் பதிவு செய்யலாம்.
மேலும், பயனாளிகளின் பெயர்களை பதிவு செய்வதற்கு வீடு வீடாகச் சென்று பதிவு செய்யும் பணியை மாநில அதிகாரிகள் விரைவில் தொடங்குவார்கள். 8147500500 என்ற எண்ணிற்கு எஸ்எம்எஸ் அனுப்புவதன் மூலமோ அல்லது 1902 என்ற எண்ணிற்கு அழைப்பதன் மூலமோ இந்தத் திட்டத்தைப் பற்றிய எந்த விளக்கத்தை அறிந்து கொள்ளலாம்.