இந்த அமைப்புகளுக்கான மின் கட்டண உயர்வை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் – ஓபிஎஸ்

வணிக மற்றும் தொழில் அமைப்புகளுக்கான மின் கட்டண உயர்வை உடனடியாக ரத்து வேண்டும் என ஓபிஎஸ் கோரிக்கை
வீட்டு இணைப்புகளுக்கு எவ்வித மின்கட்டண உயர்வும் இல்லை. அனைத்து இலவச மின்சார சலுகைகளும் தொடரும். வணிக, தொழில் அமைப்புகளுக்கு மிக குறைந்த அளவிலேயே மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. வணிக, தொழில் அமைப்புகளுக்கு மட்டும் யூனிட் ஒன்றுக்கு 13-21 பைசா வரை மின்கட்டணம் உயரும் என மின்சார வாரியம் என தெரிவித்துள்ளது.
ஒன நிலையில், ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், வணிக மற்றும் தொழில் அமைப்புகளுக்கான மின் கட்டணத்தை இரண்டு ஆண்டுகளில் இரண்டாவது முறையாக உயர்த்தியுள்ள திமுக அரசிற்கு கடும்கண்டனம். விலைவாசி உயர்வினைக் கருத்தில் கொண்டு, ஏழை, எளிய மக்களின் நலனையும், வணிக மற்றும் தொழில் அமைப்புகளின் நலனையும் காக்கும் வண்ணம், வணிக மற்றும் தொழில் அமைப்புகளுக்கான மின் கட்டண உயர்வை உடனடியாக ரத்து வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
வணிக மற்றும் தொழில் அமைப்புகளுக்கான மின் கட்டணத்தை இரண்டு ஆண்டுகளில் இரண்டாவது முறையாக உயர்த்தியுள்ள திமுக அரசிற்கு கடும் கண்டங்கள்!
விலைவாசி உயர்வினைக் கருத்தில் கொண்டு, ஏழை, எளிய மக்களின் நலனையும், வணிக மற்றும் தொழில் அமைப்புகளின் நலனையும் காக்கும் வண்ணம், வணிக மற்றும் தொழில்… pic.twitter.com/MX47oNyHWP
— O Panneerselvam (@OfficeOfOPS) June 9, 2023