pugalenthi [Imagesource : representative]
ஜெயலலிதாவை பேசிவிட்டு தமிழகத்தில் அரசியல் பேச வேண்டும் என்றால் அண்ணாமலை அதை மறந்து விட வேண்டும் என புகழேந்தி பேட்டி.
நேற்று செய்தியாளர் சந்திப்பின் போது, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள், அதிமுக ஒரு ஊழல் கட்சி. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஊழலுக்காக சட்டத்தால் தண்டிக்கப்பட்டவர். அதனால் தமிழ்நாடு ஊழல் மாநிலம் என பேட்டியளித்திருந்தார்.
இதுகுறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி அவர்கள், அண்ணாமலையை வளர்த்து விட்டதே எடப்பாடிதான். மத்திய அரசு இருக்கும் தைரியத்தில் அண்ணாமலை பேசக்கூடாது. ஜெயலலிதாவை பேசிவிட்டு தமிழகத்தில் அரசியல் பேச வேண்டும் என்றால் அண்ணாமலை அதை மறந்து விட வேண்டும். வெளியிலே வர முடியாது. பெண்கள் துரத்தி துரத்தி அடிக்கிற காட்சியை தமிழகம் பார்க்கும். ஜெயலலிதாவை தமிழக மக்கள் தெய்வமாக பார்க்கிறார்கள்.
ஜெயலலிதாவை விமர்சிப்பதற்கு அண்ணாமலைக்கு என்ன யோக்கியதை உள்ளது. ஜெயலலிதாவை உயர் நீதிமன்றம் விடுதலை செய்தது. எந்த அடிப்படையில் அவரை குற்றவாளி என அண்ணாமலை சொல்கிறார். அண்ணாமலை வெளியில் நடமாட முடியாது. இதை அரசியல் ரீதியாக சொல்கிறேன். அண்ணாமலை பற்றி எல்லாம் எங்களுக்கு கவலை இல்லை. எவ்வளவோ பேரை நாங்கள் அரசியலில் பார்த்து விட்டோம் தெரிவித்துள்ளார்.
சென்னை : வக்ஃபு (திருத்த) சட்டத்திற்கு எதிராக தவெக தொடர்ந்த வழக்கு குறித்து இன்றைய உச்சநீதிமன்ற விசாரணை தொடர்பான பத்திரிகையாளர்…
ஆஸ்திரேலியா : சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) 2023-25 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (World Test Championship - WTC)…
சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், சமீபத்தில் பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சி ஒன்றில்…
சென்னை : தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.…
பிகார் : இந்த ஆண்டு இறுதியில் பீகார் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இன்று காலை தர்பங்காவில் 'சிக்ஷா நியாய் சம்வாத்'…
டெல்லி : தமிழ்நாடு ஆளுநர் விவகாரத்தில், ஆளுநர்கள் அனுப்பும் மசோதாக்கள் மீது 3 மாதங்களுக்குள் குடியரசுத் தலைவர் முடிவெடுக்க, உச்ச…