Somanath [file image]
உலகிலேயே முதல் நாடாக நிலவின் தென்துருவத்தை ஆராய, ரூ.615 கோடி செலவில் விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) உருவாக்கப்பட்ட சந்திரயான்-3 விண்கலம், கடந்த ஜூலை 14-ம் தேதி, ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஜிஎஸ்எல்வி LVM3 M4 ராக்கெட் மூலம் விண்ணில் பாய்ந்தது.
சந்திரயான்-3 விண்ணில் செலுத்தப்பட்டது முதல் பூமியின் சுற்றுவட்டப்பாதை உயர்த்தும் பணி, நிலவின் சுற்றுவட்டப்பாதை குறைப்பு மற்றும் சந்திரயான்-3 விண்கலத்தின் உந்துவிசைக் கலனில் இருந்து ‘விக்ரம்’ லேண்டர் பகுதியை தனியாக பிரிப்பது என பல கட்டங்கள் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது.
தற்போது நிலவை சுற்றி வந்த சந்திரயான்-3 விண்கலம், சற்று முன் (6.04 மணி) நிலவின் தரையில் வெற்றிகரமாக கால் பதித்து வரலாற்று சாதனையை படைத்துள்ளது. இப்போது, சந்திரயான் -3 நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கும் பணி வெற்றி பெற்றதால், உலகின் முதல் நாடு என்ற பெருமையையும், நிலவில் கால் பதித்த இந்தியா பெற்றுள்ளது.
இந்நிலையில், இஸ்ரோ தலைவர் எஸ் சோம்நாத், “சந்திரயான்-3 பணியின் வெற்றிக்காக பின்னணியில் உள்ள தனது குழுவினருக்கு நன்றி” என்று கூறினார். சந்திரயான்-3 திட்டத்தை வெற்றியடைய செய்த வீர முத்துவேலுக்கு தனது பாராட்டை தெரிவித்த சோம்நாத், “சந்திரயான் 1ல் தொடங்கிய பயணம் சந்திரயான் 2-ஐ கடந்து இப்போது இந்த இடத்தில் நிற்கிறோம். சந்திரயான் 2 மூலம் இன்னும் தகவல் தொடர்பு இருக்கிறது. இந்த பணியில் உடன் இருந்த அனைவருக்கும் நன்றி” என்று தெரிவித்துள்ளார்.
அரியலூர் : கங்கை கொண்ட சோழபுரத்தில் நடைபெற்றுவரும் ஆடி திருவாதிரை நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்றார். தமிழ்நாட்டின் அரியலூர் மாவட்டத்தில்…
அரியலூர் : பிரதமர் நரேந்திர மோடி இன்று தமிழ்நாட்டின் அரியலூர் மாவட்டத்தில் உள்ள கங்கைகொண்ட சோழபுரத்தில் அமைந்துள்ள பிரகதீஸ்வரர் கோயிலில்…
அரியலூர் : பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஜூலை 27) கங்கைகொண்ட சோழபுரத்தில் நடைபெறும் ஆடி திருவாதிரை விழாவில் பங்கேற்கிறார். இந்த…
சேலம் : மேட்டூர் அணையில் இருந்து அதிகளவு உபரி நீர் வெளியேற்றப்படுவதால், காவிரி ஆற்றின் கரையோர மாவட்டங்களுக்கு வெள்ள அபாய…
அரியலூர் : திருச்சி விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் கங்கைகொண்ட சோழபுரம் வந்தடைந்தார் பிரதமர் மோடி. அரியலூர் மாவட்டத்தில்…
இராணிப்பேட்டை : விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், "முதலமைச்சர் ஆகும் தகுதி எனக்கு இல்லையா?" என்று கேள்வி எழுப்பியது,…