இங்கிலாந்து நாட்டின் பர்மிங்காம் நகரில் நடைபெறும் ஆல் இங்கிலாந்து பேட்மிண்டன் போட்டி நடைபெற்று வருகிறது.
லக்ஷயா சென் அரையிறுதிக்கு முன்னேற்றம்:
ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று முன்தினம் இந்திய வீரர் லக்ஷயா சென் உலகின் மூன்றாம் நிலை வீரரான ஆண்டர்ஸ் ஆண்டோசெனை தோற்கடித்தார். ஆண்டர்ஸ் ஆண்டோசெனை 21-16, 21-18 என்ற புள்ளிக்கணக்கில் லக்ஷ்யா தோற்கடித்தார். ஆண்டர்ஸை வீழ்த்தியதால் லக்ஷ்யா காலிறுதிக்கு முன்னேறினார்.
இந்நிலையில், காலிறுதி போட்டியில் சீனா வீரர் லு குவாங் சூ வாக் காயம் காரணமாக வெளியேறியதால் இந்திய வீரர் லக்ஷயா சென் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதனால், அரையிறுதிக்கு லக்ஷயா சென் முன்னேறினார்.
இந்திய வீராங்கனைகள் அரையிறுதிக்கு முன்னேற்றம்:
ஆல் இங்கிலாந்து சாம்பியன்ஷிப் தொடரின் மகளிர் இரட்டையர் பிரிவில் இந்திய அணி த்ரிசா ஜாலி-காயத்ரி கோபிசந்த் ஜோடி, 2-ம் நிலை வீராங்கனையான கொரியாவின் லீ சோஹி, ஷின் சியுஞ்சன் ஜோடியை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது. தரவரிசையில் 46-வது ஜோடியான திரிசா-காயத்ரி ஜோடி 14-21, 22-20, 21-15 என்ற கணக்கில் லீ மற்றும் ஷின் ஜோடியை வீழ்த்தியது.
மதுரை : மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவத்தில், பக்தர்கள் நீரை பீய்ச்சி…
லக்னோ : காஷ்மீர் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்திய முப்படைகளும் தயார்நிலையில் இருக்க பிரதமர் மோடி தலைமையிலான பாதுகாப்பு…
திருவனந்தபும் : கேரளாவில் ரூ.8,867 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள விழிஞ்சம் துறைமுகத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். கேரள…
சென்னை : நடிகர் சூர்யா நடிப்பில் ரிலீசாகியுள்ள 'சூர்யா, பூஜா ஹெக்டே நடித்த 'ரெட்ரோ' திரைப்படம் நேற்று (மே 1)…
சென்னை : ஈரோடு மாவட்டம் சிவகிரி விலாங்காட்டு வலசை பகுதியை சேர்ந்த ராமசாமி - பாக்கியம் தம்பதி அவர்களின் பண்ணை…
சென்னை : தமிழ்நாட்டில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் மாநில அரசு பாடத்திட்டத்தை பின்பற்றும் பள்ளிகளில் 1ஆம் வகுப்பு முதல்…