பிக்பாஷ் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. நேற்று குயின்ஸ்லாந்தில் நடந்த 5-வது லீக் ஆட்டத்தில் பிரிஸ்பேன் ஹீட் , மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற பிரிஸ்பேன் ஹீட் முதலில் பந்து வீசமுடிவு செய்தது.
முதலில் பேட்டிங் செய்த மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணி இறங்கியது. மன அழுத்த பிரச்சினை காரணமாக 5 வார ஓய்வுக்கு பிறகு களம் இறங்கிய கேப்டன் மேக்ஸ்வெல் பழைய அதிரடி ஆட்டத்தை ரசிகர்களால் பார்க்க முடிந்தது.
மத்தியில் இறங்கிய மேக்ஸ்வெல் 39 பந்துகளில் 7 பவுண்டரி, 5 சிக்சர் என 83 ரன்கள் குவித்தார். இதனால் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழந்து 167 ரன்கள் எடுத்தனர். பின்னர் இறங்கிய பிரிஸ்பேன் ஹீட் அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழந்து 145 ரன் மட்டுமே எடுத்தது. இதனால் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணி 22 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஐ.பி.எல். தொடரில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி மேக்ஸ்வெல்லை ரூ.10.75 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லி : எய்ம்ஸ் ராய்ப்பூரைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்களான டாக்டர் ஆஷிஷ் கோப்ரகடே மற்றும் டாக்டர் எம். ஸ்வாதி ஷெனாய் ஆகியோர்,…
சென்னை : தமிழ்நாட்டில் பி.எட். (கல்வியியல் இளங்கலை) படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் ஜூலை 21, 2025…
லண்டன் : நாளை (ஜூலை 10, 2025) லண்டனில் உள்ள புகழ்பெற்ற லார்ட்ஸ் மைதானத்தில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும்…
சென்னை : தமிழ்நாட்டின் தூத்துக்குடியில் விரைவில் திறக்கப்பட உள்ள வின்ஃபாஸ்ட் ஆட்டோ இந்தியாவின் மின்சார வாகன உற்பத்தி ஆலைக்கு, ‘நான்…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், உக்ரைனுக்கு மேலதிக ஆயுதங்களை அனுப்புவதற்கு ஒப்புதல் அளித்த பிறகு, ரஷ்ய அதிபர்…
சென்னை : புழல் மத்திய சிறையில் காவலர்களால் கொடூரமாக தாக்கப்பட்ட பன்னா இஸ்மாயில், பிலால் மாலிக், மற்றும் போலீஸ் பக்ரூதீன்…