அடுத்தாண்டு நடைபெற உள்ள ஐபிஎல் தொடருக்கான ஏலம் வருகின்ற 19-ம் தேதி நடைபெறுகிறது. ஐபிஎல் தொடருக்கான ஏலம் ஆண்டு தோறும் பெங்களூருவில் நடைபெற்று வந்தது. ஆனால் கடந்த ஆண்டு பெங்களூரில் நடைபெறாமல் ஜெய்ப்பூரில் நடைபெற்றது.
அடுத்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடருக்கான ஏலம் டிசம்பர் 19ம் தேதி கொல்கத்தாவில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஏலத்தில் 85 கோடி வரை செலவு செய்யலாம் என ஐபிஎல் நிர்வாக குழு தெரிவித்துள்ளது.
ஏலத்திற்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இடம் 3.2 கோடியே கையிருப்பில் வைத்துள்ளது. இந்நிலையில் ஏலத்திற்கு இன்னும் சில நாள்களே உள்ள நிலையில் சென்னை அணியில் தக்க வைத்துள்ள வீரர்களின் பெயரை குறிப்பிடாமல் அவர்களின் ஜெர்சி நம்பரை மட்டும் தனது ட்விட்டர் பக்கத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் வெளியிட்டு உள்ளது.
அதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனியின் ஜெர்சி நம்பரான 7 இடம்பெற்று உள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.உலகக்கோப்பைக்கு பிறகு ஒரு போட்டியில் கூட கலந்து கொள்ளாத தோனி ஐபிஎல் தொடரில் விளையாடுவாரா..? என்ற எண்ணம் ரசிகர்களிடம் இருந்த நிலையில் இந்த அறிவிப்பு ரசிகர்களுக்கு மகிழ்ச்சியாக உள்ளது.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…