அன்மையில் தான் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட ஆஸ்திரேலியா அணிகள் விளையாடி மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விராட் கோலி தலைமையிலான இந்திய ஒருநாள் தொடரை வெற்றிகரமாக 2-1 என்ற கணக்கில் வென்றது.
இந்த தொடரை முடித்த பின்னர் இந்திய அணி நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு 5 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டி மற்றும் 2 டெஸ்டில் விளையாடுவதற்காக சென்று உள்ளது.அதன்படி இந்தியா – நியூசிலாந்து அணிகள் மோதும் முதல் டி -20 போட்டி ஆக்லாந்தில்இன்று நடைபெறுகிறது.
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே இதுவரை 11 ஆட்டங்கள் நடைபெற்று உள்ளது. அதில் 8 நியூசிலாந்து போட்டிகளில் வென்றுள்ளது.இந்திய அணி 3 போட்டிகளிலும் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இன்று நடைபெறும் போட்டியானது இரு அணிகளுக்கும் 12-வது போட்டி ஆகும்.இன்று மதியம் 12.20 மணிக்கு ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது.
இந்திய அணிக்கு தொடக்கவீரர் தவான் இல்லாதது சற்று பின்னடைவு ஆஸ்திரேலிய தொடரின் போது தவானுக்கு காயம் ஏற்பட்டது.இதனால் கடைசி போட்டியில் முழுமையாக தவான் விளையாடவில்லை. இந்நிலையில் தவானுக்கு காயம் ஏற்பட்டதால், நியூசிலாந்து தொடருக்கான இந்திய அணியில் இருந்து விலகினார். தவானுக்கு பதிலாக நியூசிலாந்தில் இந்திய ‘ஏ’ அணிக்காக விளையாடி வருகின்ற சஞ்சு சாம்சன் தற்போது இந்திய அணியில் சேர்க்கப்பட்டார்.நியூசிலாந்தும் வழுவான நிலையில் இருப்பதால் இரு அணிகள் இடையே ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும் என்று கிரிக்கெட் விமர்சகர்கள் கருதுகின்றனர்.மேலும் இந்த இரு அணிகளும் முதல் போட்டியிலே வெற்றிக் கணக்கை தொடங்க தீவிரமாக உள்ளன.யாருக்கு வெற்றி என்பது பற்றிய உங்களுடைய கிரிக்கெட் கருத்து என்ன.?
சென்னை : வடமேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய மேற்கு வங்கம், வடக்கு ஒடிசா கடற்கரை பகுதியில் வளிமண்டல…
உருளையன்பேட்டை : புதுச்சேரியைச் சேர்ந்த மாடல் அழகி சான் ரேச்சல் (25) தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை…
புக்கான் : ஈரானில் இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து கொன்றவருக்கு பொதுவெளியில் மரண தண்டனையை நிறைவேற்றிய அந்நாட்டு அரசு. இந்த வழக்கு…
சென்னை : திருவள்ளூர் அருகே ஏகாட்டூரில் இன்று அதிகாலை 5:20 மணியளவில் சென்னை துறைமுகத்தில் இருந்து ஜோலார்பேட்டைக்கு எரிபொருள் (டீசல்)…
சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்றும், நாளையும் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும்…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் (தவெக) சார்பில் சென்னை சிவானந்தா சாலையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், கூட்ட நெரிசலாலும், வெயிலின்…