முதல்தர கிரிக்கெட்டில் 1100 விக்கெட்டுகள்… ஜேம்ஸ் ஆண்டர்சன் புதிய மைல்கல்.!

Jimmy anderson 1100

ஜேம்ஸ் ஆண்டர்சன், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக விக்கெட் எடுத்ததன் மூலம் முதல்தர கிரிக்கெட்டில் 1100 விக்கெட்களை எடுத்துள்ளார்.

இங்கிலாந்து அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ஜேம்ஸ் ஆண்டர்சன், 40 வயதிலும் வேகப்பந்து வீச்சில் எதிரணிக்கு தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறார். பர்மிங்காமில் உள்ள எட்ஜ்பாஸ்டனில் நடந்துவரும் ஆஷஸ் தொடரில் முதல் போட்டியின்போது, ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் கேரியின் (66 ரன்கள்) விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் முதல்தர கிரிக்கெட்டில் 1100 விக்கெட்களை வீழ்த்தி இந்த புதிய மைல்கல்லை அடைந்துள்ளார்.

இதனை இங்கிலாந்து கிரிக்கெட், ஜிம்மி GOAT. கிங் ஆஃப் ஸ்விங், முதல் தர 1100 விக்கெட்களை எடுத்துள்ளார் என ட்வீட் செய்துள்ளது. 2002 ஆம் ஆண்டு முதல் தரத்தில் அறிமுகமான ஆண்டர்சன் 289 போட்டிகளில் 1,100 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 7/19 அவரது சிறந்த பந்துவீச்சாக பார்க்கப்படுகிறது. அவர் 48 நான்கு விக்கெட்டுகளையும், 54 ஐந்து விக்கெட்டுகளையும் இதில் பெற்றுள்ளார்.

முதல்தர கிரிக்கெட்டில் இங்கிலாந்தின் வில்பிரட் ரோட்ஸ் 1,110 போட்டிகளில் 4,204 விக்கெட்டுகளும், அடுத்தபடியாக இங்கிலாந்தின் டிச் ஃப்ரீமேன் 592 போட்டிகளில் 3,776 விக்கெட்டுகளையும், இங்கிலாந்தின் சார்லி பார்க்கர் 635 போட்டிகளில் 3,278 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

2003 இல் தனது டெஸ்ட் அறிமுகமான ஆண்டர்சன் 180 போட்டிகளில் 686 டெஸ்ட் விக்கெட்டுகளை எடுத்துள்ளார். ஆஸ்திரேலியாவின் ஷேன் வார்ன் (708) மற்றும் இலங்கையின் முத்தையா முரளிதரன் (800) ஆகியோருக்கு, பிறகு ஆண்டர்சன் 686 விக்கெட்களுடன் இந்த பட்டியலில் 3-வது இடத்தில் இருக்கிறார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்