100 நாளில் 2.25 லட்சம் பார்வையாளர்கள்.! உலகப்புகழ் பெரும் கீழடி அருங்காட்சியகம்.!

Keeladi Museum 2.25

கீழடி அருங்காட்சியகம் திறக்கப்பட்டு 100 நாட்களில் 2.25 லட்சம் பார்வையாளர்கள் பார்வையிட்டுள்ளனர்.

சிவகங்கை மாவட்டத்தில் கீழடி அருங்காட்சியகம், பழங்கால தொல்லியல் பொருட்கள் மற்றும் பண்டைய வரலாற்றின் காட்சிகளுடன் நவீன வடிவில் 18 கோடியே 41 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ளது. இந்த நவீன கலை அருங்காட்சியகத்தை முதல்வர் ஸ்டாலின் கடந்த மார்ச் 5 ஆம் தேதி தொடங்கி வைத்தார்.

இந்த கீழடி அருங்காட்சியகம் திறக்கப்பட்ட முதல் ஒருமாதம் பார்வையாளர்களுக்கு இலவச அனுமதி வழங்கப்பட்டது. அதன்பின் ஏப்ரல் 1 முதல் கட்டணமாக பெரியவர்களுக்கு 15 ரூபாய், சிறியவர்களுக்கு 10 ரூபாய் மற்றும் மாணவர்களுக்கு 5 ரூபாய் என வசூலிக்கப்பட்டது. மேலும் இங்கு கீழடியின் வரலாற்றை சொல்லும் மினி ஏசி தியேட்டர் வசதியும் உள்ளது.

இங்கு வரும் பார்வையாளர்கள் எண்ணிக்கை தினமும் அதிகரித்து வருகிறது, வெளிநாட்டினர் முதற்கொண்டு நம் வரலாற்றை கூறும் கீழடி அருங்காட்சியகத்துக்கு வந்து பார்வையிட்டு செல்கின்றனர். இந்த அருங்காட்சியகம் திறக்கப்பட்டு 100 நாட்கள் ஆகியுள்ள நிலையில் இதுவரை 2.25 லட்சம் பார்வையாளர்கள் பார்வையிட்டுள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்