சென்னை அணி விளையாட இன்னும் 12 மணி நேரங்கள் மட்டுமே உள்ளதால், அதனை மகிழ்ச்சியுடன் விளையாடுவோம் என தல தோனி உருக்கமான கூறினார்.
ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், மும்பைக்கு எதிரான முதல் போட்டியில் சென்னை அணி அபாரமாக வெற்றிபெற்றது. இந்த வெற்றி தொடரும் என ரசிகர்கள் எதிர்பார்த்து வந்த நிலையில், அது நீடிக்கவில்லை. சென்னை அணி தொடர்ந்து தோல்விகள் சந்தித்து வர, சென்னை அணி மீது விமர்சனங்கள் குவியத் தொடங்கியது.
இதுவரை சென்னை அணி 12 போட்டிகள் ஆடிய நிலையில், அதில் 4 போட்டிகளில் வெற்றி பெற்று 8 புள்ளிகளுடன் புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கிறது. அதுமட்டுமின்றி, ஐபிஎல் வரலாற்றில் முதல் முறையாக சென்னை அணி பிளே-ஆப்ஸ் சுற்றுக்கு தகுதி பெறாமல் வெளியேறவுள்ளது. இந்தநிலையில், நேற்று நடைபெற்ற பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில் 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றி பெற்றது. போட்டி முடித்தபோது பேசிய தோனி, போட்டியை ரசித்து விளையாடாவிட்டால் “வலி” மட்டுமே மிஞ்சும். இதனால் இளம் வீரர்கள் அனைவரும் எந்த சூழலிலும், மகிழ்ச்சியுடன் போட்டிகளை விளையாட வேண்டும்.
அதுமட்டுமின்றி, இந்த சீசனில் சென்னை அணி விளையாட இன்னும் 12 மணி நேரங்கள் மட்டுமே உள்ளதால், புள்ளிப் பட்டியலில் நாம் எங்கிருக்கிறோம் என்பதை நினைத்துப் பார்க்காமல், மகிழ்ச்சியுடன் விளையாடுவோம் என உருக்கமான கூறினார். இதற்கு முன், சென்னை சூப்பர் கிங்ஸ் யூ-டியூப் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில் தல தோனி, இப்படிப்பட்ட ரசிகர்கள் கிடைக்க குடுத்துவைக்க வேண்டும் என தெரிவித்துள்ளது, குறிப்பிடத்தக்கது.
இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில், 269 ரன்கள் குவித்து சாதனை படைத்ததை…
சென்னை : நடிகர் விஜய், விஜய் சேதுபதியின் மகன் சூர்யா விஜய் சேதுபதி அறிமுகமாகும் ‘ஃபீனிக்ஸ்’ திரைப்படத்தின் சிறப்பு காட்சியைப்…
வாஷிங்டன் : அமெரிக்க நாடாளுமன்றத்தில், ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்கும் இந்தியா, சீனா போன்ற நாடுகளுக்கு 500% வரி விதிக்கும்…
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) மாநில செயற்குழுக் கூட்டம் இன்று (ஜூலை 4, 2025) சென்னை பனையூரில்…
ஐரோப்பா : குரோஷியாவின் ஜாக்ரெப் நகரில் நடைபெறும் கிராண்ட் செஸ் டூர் சூப்பர்யுனைடெட் ரேபிட் & பிளிட்ஸ் 2025 போட்டியின்…
சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, 05-07-2025 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும்…