ENGvNED [File Image]
ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பைத் தொடரில் இன்று 40 ஆவது லீக் போட்டியில் புனேவில் உலா மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடப்பு சாம்பியன் ஆன இங்கிலாந்து அணியும், நெதர்லாந்து அணியும் மோதி வருகிறது. இதில் இங்கிலாந்து அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்துள்ளது.
இப்போட்டியில் இங்கிலாந்து அணியின் தொடங்க வீரர்களாக ஜானி பேர்ஸ்டோ, டேவிட் மாலன் இருவரும் களமிறங்கினர். வழக்கம்போல தொடக்க வீரர் ஜானி பேர்ஸ்டோ சொற்ப ரன் எடுத்து வெளியேறினார். மறுபுறம் சிறப்பாக விளையாடி வந்த டேவிட் மாலன் மற்றும் அடுத்து இறங்கிய ஜோ ரூட் இருவரும் கூட்டணி அமைத்து சிறப்பாக விளையாடினர். இருப்பினும் நிதானமாக விளையாடிய ஜோ ரூட் 28 ரன்னில் விக்கெட்டை இழந்தார்.
பின்னர் பென் ஸ்டோக்ஸ் களமிறங்க மறுபுறம் விளையாடி வந்த தொடக்க வீரர் டேவிட் மாலன் அரைசதம் பூர்த்தி செய்து 87 ரன்னில் விக்கெட்டை பறிகொடுத்தார். அடுத்து வந்த ஹாரி புரூக் 11, ஜோஸ் பட்லர் 5, மொயின் அலி 4 ரன் எடுத்து அடுத்தடுத்து பெவிலியன் திரும்பினர். மத்தியில் இறங்கிய கிறிஸ் வோக்ஸ் , களத்தில் இருந்த பென் ஸ்டோக்ஸ் கை கோர்த்து சரிவில் இருந்த அணியை மீட்டு கொண்டு வந்தனர்.
இதில் அதிரடியாக விளையாடிய பென் ஸ்டோக்ஸ் சதம் விளாசி 84 பந்தில் 6 பவுண்டரி , 6 சிக்ஸர் என மொத்தம் 108 ரன்கள் குவித்தார். மறுபக்கம் ஆடிவந்த கிறிஸ் வோக்ஸ் தனது நிதானமான ஆட்டத்தால் அரைசதம் விளாசி அடுத்த சில நிமிடங்களில் 51 ரன் எடுத்து விக்கெட்டை இழந்தார். இறுதியாக இங்கிலாந்து அணி 50 ஓவரில் 9 விக்கெட்டை இழந்து 339 ரன்கள் குவித்தனர். நெதர்லாந்து அணியில் பாஸ் டி லீடே 3 விக்கெட்டையும், லோகன் வான் பீக், ஆர்யன் தத் தலா 2 விக்கெட்டை பறித்தனர்.
டெல்லி : பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தி அதனை தரைமட்டமாக்கிய காட்சிகளை இந்திய ராணுவம் வெளியிட்டது. ஜம்மு -…
டெல்லி : இந்திய கிரிக்கெட் உலகின் மிக முக்கிய அடையாளமாக விளங்குபவர் விராட் கோலி. ரசிகர்களால் 'கிங்' கோலி என…
டெல்லி : எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியது பற்றியும் ஆபரேஷன் சிந்தூர் தற்போதைய நிலை குறித்தும் டெல்யில் இன்று…
சண்டிகர் : காஷ்மீர் பஹல்காமில் பயங்கரவாதிகள் தாக்குதல், அதற்கு பதிலடியாக பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகள் முகாம்கள் மீது ஆபரேஷன் சிந்தூர்…
டெல்லி : எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியது பற்றியும் ஆபரேஷன் சிந்தூர் தற்போதைய நிலை குறித்தும் வெளியுறவுத்துறை, பாதுகாப்புத்…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த வெளிவுறவு துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி, பாதுகாப்பு துறை அதிகாரிகள் சோபியா குரேஷி,…