#T20WorldCup: நமீபியாவை வீழ்த்தி 62 ரன் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் வெற்றி ..!

Published by
murugan

நமீபியா அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டை இழந்து 98 ரன்கள் எடுத்து 62 ரன்கள் வித்தியாயசத்தில் தோல்வியை தழுவியது.

கடந்த சில நாட்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வரும் டி20 உலகக் கோப்பை போட்டியின் சூப்பர் 12 குரூப் சுற்றின் இன்றைய தினத்தில் ஆப்கானிஸ்தான் மற்றும் நமீபியா அணிகள் மோதியது. டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்த நிலையில், அணியின் தொடக்க வீரர்களாக ஹஸ்ரத்துல்லாஹ் ஜசாய், முகமது ஷாஜாத் ஆகியோர் களமிறங்கினர்.

ஆரம்பம் முதலே இருவரும் அதிரடியாக விளையாடி அணிக்கு ரன்கள் சேர்த்த நிலையில், ஹஸ்ரத்துல்லாஹ் 33 ரன்களில் கேட்ச் கொடுத்து விக்கெட்டை இழக்க, இதனையடுத்து, களமிறங்கிய ரஹ்மானுல்லா குர்பாஸ் 4 ரன்களில் எல்பிடபுள்யூ ஆகி வெளியேறினார். பின்னர், முகமது ஷாஜாத் 45 ரன்களும் எடுத்த நிலையில் கேட்ச் கொடுத்து விக்கெட்டை பறிகொடுத்தார்.

இதனைத் தொடர்ந்து, களம் கண்ட கேப்டன் முகமது நபி 32, அஸ்கர் ஆப்கான் 31 ரன்கள் எடுக்க  இறுதியில், 20 ஓவர் முடிவில் ஆப்கானிஸ்தான் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 160 ரன்கள் எடுத்தனர். நமீபியா அணியில் ரூபன் ட்ரம்பெல்மேன், லோஃப்டி-ஈடன் தலா 2 விக்கெட்டுகளை பறித்தனர். 161 ரன்கள் இலக்குடன் நமீபியா அணியின் தொடக்க வீரராக களமிறங்கிய கிரேக் வில்லியம்ஸ் 1 ரன் எடுத்து விக்கெட்டை இழந்தார்.

அடுத்து நிதானமாக விளையாடிய மைக்கேல் வான் 11, ஜான் நிகோல் 14 ரன் எடுக்க பிறகு மத்தியில் இறங்கிய டேவிட் வைஸ் சிறப்பாக விளையாடி அதிகபட்சமாக 26 ரன்கள் எடுத்து பெவிலியன் திரும்பினார். இதைத்தொடர்ந்து, களம் கண்ட அனைத்து வீரர்களும் சொற்ப ரன் எடுத்து வெளியேற இறுதியாக நமீபியா அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டை இழந்து 98 ரன்கள் எடுத்து 62 ரன்கள் வித்தியாயசத்தில் தோல்வியை தழுவியது.

ஆப்கானிஸ்தான் அணியில் ஹமீத் ஹாசன், நவீன்-உல்-ஹக் தலா 3,  குல்பாடின் நாப் 2 விக்கெட்டை பறித்தனர்.

Published by
murugan

Recent Posts

ஆக்சியம் 4 திட்டம்: இன்று பூமிக்கு திரும்புகிறார் சுபான்ஷு சுக்லா!

ஆக்சியம் 4 திட்டம்: இன்று பூமிக்கு திரும்புகிறார் சுபான்ஷு சுக்லா!

அமெரிக்கா : இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா உட்பட நான்கு பேர், சர்வதேச விண்வெளி நிலையத்தில் (ISS) 14…

7 minutes ago

திருப்பரங்குன்றம் முருகன் கோயில் குடமுழுக்கு: இன்று முதல் தரிசனத்துக்கு அனுமதி!

மதுரை : திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில், இன்று (ஜூலை 14) ஆம் தேதி காலை 5:25 முதல் 6:10…

26 minutes ago

திருவள்ளூர் ரயில் விபத்து: ரயில் சேவையில் மாற்றம் – தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு.!

சென்னை : திருவள்ளூர் அருகே ஜூலை 13, 2025 அன்று அதிகாலை 5:20 மணியளவில் சரக்கு ரயில் ஒன்று தடம்புரண்டு…

12 hours ago

2 ஆவது விக்கெட்டை வீழ்த்தி சிராஜ் அசத்தல்! இங்கிலாந்து அணி கதறல்!

லார்ட்ஸ் : இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையே நடந்து வரும் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் மூன்றாவது போட்டியின்…

13 hours ago

இயக்குநர் பா.ரஞ்சித் படப்பிடிப்பில் ஸ்டண்ட் மாஸ்டர் மோகன்ராஜ் உயிரிழப்பு.!

சென்னை : இயக்குநர் பா.ரஞ்சித்தின் 'வேட்டுவம்' பட ஷூட்டிங்கில் சண்டை பயிற்சியாளர் மோகன்ராஜ் (52) மாரடைப்பால் உயிரிழந்தார். காஞ்சிபுரத்தைச் சேர்ந்த…

13 hours ago

வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு!

சென்னை : வடமேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய மேற்கு வங்கம், வடக்கு ஒடிசா கடற்கரை பகுதியில் வளிமண்டல…

14 hours ago