சென்னை கோட்டையை யாராலும் உடைக்க முடியல! ஆகாஷ் சோப்ரா அதிரடி ஸ்பீச்!!

Published by
பால முருகன்

ஐபிஎல் 2024 : சென்னை கோட்டையை யாராலும் உடைக்க முடியவில்லை என ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.

நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் சென்னை அணி இதுவரை சென்னையில் நடைபெற்ற ஒரு போட்டியில் கூட தோற்காமல் விளையாடிய 3 போட்டிகளிலும் வெற்றிபெற்று இருக்கிறது. இந்த சீசனில் மொத்தம் ஐந்து போட்டிகள் சென்னை விளையாடி இருக்கும் நிலையில், சென்னையை தவிர மற்ற இடங்களில் நடைபெற்ற போட்டியில் மட்டும் தான் தோல்வி அடைந்து இருக்கிறது.

சென்னையில் அசைக்க முடியாத பார்மில் இருக்கும் சென்னை அணியை இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆகாஷ் சோப்ரா பாராட்டி பேசியுள்ளார். இது குறித்து பேசிய ஆகாஷ் சோப்ரா “சென்னை சூப்பர் கிங்ஸ் இந்த சீசனில் அருமையாக விளையாடி வருகிறது. அவர்கள் சொந்த மண்ணில் தோற்காத அணி. சென்னை அணியை அவர்களுடைய சொந்த வீட்டில் யாராலும் வெல்ல முடியவில்லை. அவர்களின் கோட்டையை யாராலும் உடைக்க முடியவில்லை.

கொல்கத்தா அணி மிகவும் வலிமை வாய்ந்த அணி. இதனை பற்றி நான் சொல்லி தான் தெரியவேண்டும் என்று கூட இல்லை. அவர்களை போல ஒரு வலிமையான அணியை வீழ்த்துவது எளிதான விஷயம் இல்லை ஆனால்ம் சென்னை அதனை அருமையாக செய்ததது. பேட்டிங் மட்டும் பந்துவீச்சில் சென்னை சூப்பராக செயல்பட்டது.

கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் தீபக் சாஹர் விளையாடவில்லை இருந்தாலும் நான் ஆச்சரியப்பட்டேன். பத்திரனாவும் சென்னையில் இல்லை, பந்துவீச்சு திடீரென்று மிகவும் பலவீனமாகிவிட்டது என்று நான் கடந்த சில நாட்களுக்கு முன்பு சொன்னேன். அதே நேரத்தில் தான் ஷர்துல் தாகூர் இறங்கி அசத்தலாக பந்துவீசி நானும் இருக்கிறேன் என்று காமித்தார். எனவே இனிமேல் சென்னை பந்துவீச்சை பொறுத்தவரையில் எந்த கவலையும் எனக்கு இல்லை” என ஆகாஷ் சோப்ரா  தெரிவித்துள்ளார்.

மேலும், நேற்று கொல்கத்தா அணிக்கு எதிராக நடைப்பெற்ற போட்டியில் முதலில் டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச்சை தேர்வு செய்ததது.  முதலில் பேட்டிங் செய்தா கொல்கத்தா அணி 20 ஓவரில் 9 விக்கெட்டை இழந்து 137 ரன்கள் மட்டுமே எடுத்தனர். அடுத்ததாக 138 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய  சென்னை அணி 17.4 ஓவரில் 3 விக்கெட் இழந்து  141 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Recent Posts

Live : மே 1 உழைப்பாளர் தினம் முதல்.., சர்வதேச நிகழ்வுகள் வரை.!

சென்னை: இன்று (மே 1, 2025) உலக உழைப்பாளர் தினம் (International Workers' Day) உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்த நாள்…

3 minutes ago

வணிக பயன்பாட்டு சிலிண்டர் விலை குறைந்தது.! எவ்வளவு தெரியுமா?

டெல்லி : ஒவ்வொரு புதிய மாதம் தொடங்கியதும், மாதத்தின் முதல் நாள் அன்று பல மாற்றங்களும் நடைமுறைக்கு வருகின்றன. வழக்கமாக…

56 minutes ago

வெல்லப்போவது யார்.? ராஜஸ்தான் – மும்பை இன்று பலப்பரீட்சை.!

ஜெய்ப்பூர்: ஐபிஎல் 2025 இன் 50வது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள சவாய்…

1 hour ago

கொளுத்தும் வெயில்.., “குழந்தைகள், கர்ப்பிணிகள் வெளியே வராதீங்க” – அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவுரை.!

சென்னை : தமிழகத்தில் இன்று முற்பகல் வரை வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்பட்டாலும், நண்பகலில் வெயில் தாக்கம் படிப்படியாக அதிகரிக்ககூடும். தமிழகத்தில்…

2 hours ago

முதல் அணியாக வெளியேறியது சென்னை.! தோல்விக்கு முக்கிய காரணம் இது தான் தோனி சொன்ன பதில்.!

சென்னை : நேற்றைய ஐபிஎல் போட்டியில், சென்னை அணியை வீழ்த்தி பஞ்சாப் அபார வெற்றி பெற்றுள்ளது. முதலில் பேட்டிங் செய்த…

2 hours ago

சொந்த மண்ணில் சென்னைக்கு சம்பவம் செய்த பஞ்சாப்! 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி!

சென்னை : இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் அணியும், சென்னை அணியும் மோதியது. போட்டியில்…

10 hours ago