ஆஸ்திரேலிய வீரர் ஸ்காட் போலண்ட் வெறும் 4 ஓவர் வீசி 7 ரன்கள் மட்டுமே கொடுத்து 6 விக்கெட்டை பறித்தார்.
இங்கிலாந்து ஆஸ்திரேலியா இடையே 3-வது ஆஷஸ் டெஸ்ட் போட்டி கடந்த ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. இப்போட்டியில் முதலில் இறங்கிய இங்கிலாந்து அணி 65.1 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 185 ரன்கள் மட்டுமே எடுத்தனர். இதையடுத்து முதல் நாள் ஆட்டத்தில் மீதம் இருந்த நேரத்தில் ஆஸ்திரேலிய அணி தனது முதல் இன்னிங்சை தொடங்கியது.
இறுதியாக முதல் நாள் ஆட்ட முடிவில் ஆஸ்திரேலிய அணி 1 விக்கெட்டை இழந்து 16 ஓவரில் 61 ரன்கள் எடுத்தது. நேற்று இரண்டாம் நாள் ஆட்டம் தொடங்கி நடைபெற்ற நிலையில், ஆஸ்திரேலிய அணி 87.5 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 267 ரன்கள் மட்டுமே எடுத்தனர்.இதையடுத்து, மீதமிருந்த நேரத்தில் 82 ரன்கள் பின் தங்கிய நிலையில் இங்கிலாந்து அணி 2-வது இன்னிங்க்ஸை தொடங்கி விளையாடிய நிலையில் நேற்றைய 2-ம் நாள் முடிவில் இங்கிலாந்து 4 விக்கெட்டுகளை இழந்து 31 ரன்கள் எடுத்திருந்தது.
இந்நிலையில், இன்று 3-ஆம் நாள் ஆட்டம் நடைபெற்றது. ஆட்டம் தொடக்கியதும் தொடர்ந்து விக்கெட் பறிபோனதால் இங்கிலாந்து அணி 27.4 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து வெறும் 68 ரன்கள் மட்டுமே எடுத்தனர். இதனால், ஆஸ்திரேலிய அணி இன்னிங்ஸ் மற்றும் 14 ரன்கள் வித்யாசத்தில் வெற்றி பெற்று 3-0 என்ற கணக்கில் ஆஷஸ் கோப்பையை தக்க வைத்துக் கொண்டது.
இப்போட்டியில், ஆஸ்திரேலிய அணி கோப்பையை தக்க வைக்க ஸ்காட் போலண்ட் பந்து வீச்சு பெரிதும் உதவியது. காரணம் ஆஸ்திரேலிய வீரர் ஸ்காட் போலண்ட் வெறும் 4 ஓவர் வீசி 7 ரன்கள் மட்டுமே கொடுத்து 6 விக்கெட்டை பறித்தார். மேலும், 4 ஓவரில் ஒரு ஓவர் மெய்டன் செய்துள்ளார். இதனால், ஸ்காட் போலண்ட்-க்கு ஆட்டநாயகன் விருது கொடுக்கப்பட்டுள்ளது.
சென்னை : இன்று தமிழ்நாட்டில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. தேர்வு எழுதியதில் 95.03% மாணவர்கள் தேர்ச்சி பெற்று…
சென்னை : தமிழ்நாட்டில் கடந்த மார்ச் 1, 2025 முதல் மார்ச் 22, 2025 வரையில் +2 பொதுத்தேர்வுகள் நடைபெற்றன.…
மதுரை : இன்று (மே 8) மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண நிகழ்வு காலை…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் நேற்று அதிகாலை பாகிஸ்தான் பகுதிக்குள் உள்ள பல்வேறு பயங்கரவாத அமைப்புகளின்…
இஸ்லாமாபாத் : நேற்று (மே 7) அதிகாலை 1.30 மணியளவில் இந்திய ராணுவம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…