ஆஷஸ் தொடர்: இன்று 4-ஆம் நாள் ஆட்டம்..!

Published by
murugan

ஆஸ்திரேலியா- இங்கிலாந்து இடையே இன்று 4-ஆம் நாள் ஆட்டம் நடைபெறவுள்ளது.

ஆஸ்திரேலியா- இங்கிலாந்து இடையே 2-வது டெஸ்ட் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங் தேர்வு செய்தனர். முதலில் இறங்கிய ஆஸ்திரேலியா 2-வது நாள் ஆட்டத்தில் 9 விக்கெட் இழந்து 473 ரன்கள் எடுத்தபோது டிக்ளேர் செய்தது.  மீதம் இருந்த நேரத்தில் இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸை தொடங்கியது.

2-வது நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து 2 விக்கெட் இழந்து 17 ரன்கள் எடுத்திருந்தது.  நேற்று 3-வது நாள் ஆட்டம் தொடங்கியது. சிறப்பாக விளையாடிய  டேவிட் மலான் 80 , ஜோ ரூட் 62 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தனர். அடுத்தடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேற இறுதியாக இங்கிலாந்து அணி 84.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 236 ரன்கள் மட்டுமே எடுத்தனர்.

இதனால், ஆஸ்திரேலிய அணி தன்னுடைய 2-வது இன்னிங்ஸை 237 ரன்கள் முன்னிலையுடன் தொடங்கியது. நேற்றைய 3-வது நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலிய அணி ஒரு விக்கெட் இழந்து 45 ரன் எடுத்து 282 ரன்கள் முன்னிலையில் உள்ளது. இந்நிலையில், இன்று 4-ஆம் நாள் ஆட்டம் நடைபெறவுள்ளது. களத்தில் மார்கஸ் ஹாரிஸ் 21*, மைக்கேல் நெசெர் 2 * ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

Published by
murugan

Recent Posts

KKR vs CSK : வெற்றி பெருமா சென்னை.? பிளே ஆஃப் வாய்ப்பை பெருமா கொல்கத்தா.? டாஸ் விவரம் இதோ.!

KKR vs CSK : வெற்றி பெருமா சென்னை.? பிளே ஆஃப் வாய்ப்பை பெருமா கொல்கத்தா.? டாஸ் விவரம் இதோ.!

கொல்கத்தா : ஐபிஎல் 2025-இன் 57-வது போட்டியில், நடப்பு சீசனில் லீக் சுற்றுடன் நடையை கட்டவுள்ள சென்னை மற்றும் பிளே…

11 minutes ago

பஹல்காம் தாக்குதல்: பொதுமக்களிடம் இதெல்லாம் உள்ளதா.? என்ஐஏ வேண்டுகோள்.!

டெல்லி : ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22, 2025 அன்று நடந்த பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக தகவல்…

13 minutes ago

IND Vs PAK.. போர் பதற்றம்.., ஐபிஎல் தொடர் கைவிடப்படுகிறதா..? பிசிசிஐ விளக்கம்!

டெல்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு இந்தியா பழிவாங்கியுள்ளது. மே 7 ஆம் தேதி நள்ளிரவு சுமார் 1.30 மணியளவில்,…

52 minutes ago

சென்னையில் போர் பாதுகாப்பு ஒத்திகை.! ‘அச்சம் வேண்டாம்’ – பேரிடர் மேலாண்மை ஆணையம்.!

சென்னை : மத்திய உள்துறை அமைச்சகத்தின் அறிவுறுத்தலின்படி, சில முக்கிய நிறுவல்களில் சிவில் பாதுகாப்பு பயிற்சி மற்றும் ஒத்திகையை ஏற்பாடு…

1 hour ago

ஆபரேஷன் சிந்தூர்: வீர உரையாற்றிய இந்த சிங்கப்பெண்கள் யார்.? சிலிர்க்கும் பின்னணி..!!

டெல்லி : பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இன்று (மே 07) இலக்குகளைக் குறிவைத்து ராணுவ தாக்குதல்களை மேற்கொண்டுள்ளோம்" என்று…

3 hours ago

ஆபரேஷன் சிந்தூர் என்றால் என்ன? நள்ளிரவு பயங்கரவாதிகளின் தூக்கம் துளைத்த தரமான சம்பவம்.!

காஷ்மீர் : 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலுள்ள பயங்கரவாத முகாம்களை துல்லியமாக தாக்கியது. மே 7,…

3 hours ago