இங்கிலாந்து சென்று ஆஸ்திரேலிய அணி 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. முதல் டெஸ்ட் போட்டி நேற்று முன்தினம் இங்கிலாந்தில் உள்ள பர்மிங்காம் மைதானத்தில் தொடங்கியது.
இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. தொடக்க வீரர்களாக டேவிட் வார்னர், கேமரூன் பான்கிராப்ட் இருவரும் களமிறக்கின்றனர். ஆட்டம் தொடக்கத்திலே டேவிட் வார்னர் 2 ரன்னில் வெளியேறினார்.
இதை தொடர்ந்து முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி தொடக்க வீரர்களாக ரோரி பர்ன்ஸ் , ஜேசன் ராய் இருவரும் களமிறங்கினர்.ஆட்டம் தொடக்கத்தில் நிதானமாக விளையாடி ஜேசன் ராய் 10 ரன்களில் வெளியேற பின்னர் இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட் இறங்கினர்.
ரோரி பர்ன்ஸ் , ஜோ ரூட் இருவரும் கூட்டணியில் இணைந்து அணியின் எண்ணிக்கையை உயர்த்தினர். நிதானமாக விளையாடி இருவரும் அரைசதம் கடந்தனர்.சிறப்பாக விளையாடி வந்த ஜோ ரூட் 57 ரன்னில் அவுட் ஆனார்.
பின்னர் இறங்கிய ஜோ டென்லி 18 , ஜோஸ் பட்லர் 5 ரன்னில் வெளியேறினர்.ஆட்டம் தொடக்கத்தில் இருந்து அதிரடியாகவும் ,நிதானமாகவும் விளையாடி ரோரி பர்ன்ஸ் முதல் சதத்தை நிறைவு செய்தார்.
2- ம் நாள் ஆட்டம் முடிவில் இங்கிலாந்து அணி 267 ரன்கள் எடுத்து 4 விக்கெட்டை இழந்து உள்ளது. களத்தில் ரோரி பர்ன்ஸ் 125 ரன்களும் , பென் ஸ்டோக்ஸ் 38 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் விளையாடி வருகின்றனர். இன்று 3- ம் நாள் ஆட்டம் நடைபெற உள்ளது.
அகமதாபாத் : இன்று அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத்…
அகமதாபாத் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில்…
சென்னை : இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது…
ஈரோடு : பண்ணை வீட்டில் தனியாக இருந்த தம்பதி கொலை செய்யப்பட்டதாக நேற்று இரவு ஈரோடு பகுதி போலீசாருக்கு தகவல்…
நெல்லை : இன்னும் ஒரு வருடத்திற்குள் தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளதால் தற்போதே கூட்டணி குறித்த பேச்சுக்கள் அரசியல்…
மும்பை : WAVES 2025 மாநாடு நேற்று மும்பையில் தொடங்கியது. பிரதமர் நரேந்திர மோடி நேற்று விழாவில் கலந்து கொண்டு…