டி20 அணியை அறிவித்த ஆஸ்திரேலியா… கேப்டனாக மிட்செல் மார்ஷ்…!

Published by
murugan

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்டீவ் ஸ்மித், பாட் கம்மின்ஸ் மற்றும் மிட்செல் ஸ்டார்க் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ள நிலையில், டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற டேவிட் வார்னர் டி20 அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

கடந்த ஆண்டு தென்னாப்பிரிக்காவை 3-0 என்ற கணக்கில் வென்றபோது ஆஸி அணியை மார்ஷ் வழிநடத்தினார். இருப்பினும், இந்திய சுற்றுப்பயணத்தின் போது விக்கெட் கீப்பர் பேட்டர் மேத்யூ வேட் அணியின் பொறுப்பை ஏற்றார். பிப்ரவரி 21-ம் தேதி  நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடர் தொடங்க உள்ளது. இதனால் பாட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க் மற்றும் ஸ்டீவன் ஸ்மித் ஆகியோருக்கு  ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

விராட் கோலிக்கு பதிலாக ரஜத் படிதாருக்கு வாய்ப்பு..?

2024 ஐசிசி டி20 உலகக்கோப்பையில் ஆஸ்திரேலியாவுக்கு யார் கேப்டனா இருப்பார் என்பது குறித்து கேள்வி என்னும் புரியாத புதிராக  உள்ளது. காரணம் ஆரோன் ஃபிஞ்ச் 2022 இல் T20 போட்டியில்  இருந்து ஓய்வு பெற்ற பிறகு  T20  போட்டிக்கு  நிரந்தர கேப்டனை ஆஸ்திரேலியா அணி  இன்னும் உறுதிப்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையில் டி20 உலகக்கோப்பையில் பாட் கம்மின்ஸ் ஆஸ்திரேலியா அணிக்கு கேப்டனாக நியமிக்க வாய்ப்புள்ளது என  கூறப்படுகிறது.

ஆஸ்திரேலியா டி20 அணி:

மிட்செல் மார்ஷ் (கேப்டன்), சீன் அபோட், ஜேசன் பெஹ்ரன்டோர்ஃப், டிம் டேவிட் , நாதன் எல்லிஸ், ஜோஷ் ஹேசில்வுட், டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்கிலிஸ், கிளென் மேக்ஸ்வெல், மேட் ஷார்ட், மார்கஸ் ஸ்டோனிஸ் , மேத்யூ வேட், டேவிட் வார்னர் , ஆடம் வார்னர்  ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

Published by
murugan

Recent Posts

சென்னை to இலங்கை விமானத்தில் பஹல்காம் தீவிரவாதிகள்? விமான நிலையத்தில் பரபரப்பு!

கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…

6 minutes ago

பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!

இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…

2 hours ago

”5,6 ஆகிய தேதிகளில் வெயிலை தணிக்க வரும் கனமழை” – வானிலை மையம் தகவல்.!

சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…

3 hours ago

“நானே போப்பாக இருக்க விரும்புகிறேன்” – டிரம்பின் வைரல் பதிவு.!

நியூயார்க் : டிரம்ப் போப் ஃபிரான்சிஸ் மறைவை தொடர்ந்து, அடுத்த போப் யாராக இருக்கும் என கேட்கப்பட்ட கேள்விக்கு, "நானே போபாக…

3 hours ago

“என்னை கொலை செய்ய சதி?” மதுரை ஆதீனம் பரபரப்பு குற்றசாட்டு!

சென்னை : இன்று (மே 3) முதல் மே 5 வரையில் சென்னை காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழக…

3 hours ago

”அதிமுகவை பாஜக அடக்கிவிட்டது” – முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் விமர்சனம்.!

சென்னை : சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்று முடிந்தது. இதில், பங்கேற்க வந்த ஸ்டாலினை,…

4 hours ago