டி-20 கிரிக்கெட்டில் 34 பந்துகளில் சதம்… சாதனை படைத்த ஆஸ்திரேலிய வீரர்.!

டி-20 கிரிக்கெட்டில் 34 பந்துகளில் சதம் அடித்து ஆஸ்திரேலிய வீரர் சான் அப்பாட் சாதனை படைத்துள்ளார்.
இங்கிலாந்து நாட்டில் நடத்தப்படும் டி-20 தொடரான டி-20 ப்ளாஸ்ட்டில், ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் சான் அப்பாட் 34 பந்துகளில் சதமடித்து, டி-20 கிரிக்கெட்டில் அதிவேக சதமடித்த ஆஸ்திரேலியரான ஆண்ட்ரு சைமண்ட்ஸ் சாதனையை சமன் செய்துள்ளார். இதன்மூலம் ஆஸ்திரேலியராக அதிவேக சதமடித்த சைமண்ட்ஸ் சாதனையை சமன் செய்துள்ளார். சர்ரே அணிக்காக விளையாடிய சான் அப்பாட், கென்ட் அணிக்கு எதிரான போட்டியில் சதமடித்துள்ளார்.
மறைந்த முன்னாள் ஆஸ்திரேலிய கிரிக்கெட்டர் ஆண்ட்ரு சைமண்ட்ஸ், கடந்த 2004 ஆம் ஆண்டு கென்ட் அணிக்காக, மிடில்செக்ஸ் அணிக்கு எதிராக விளையாடி சதமடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. சர்ரே அணி 20 ஓவர்களில் 223 ரன்கள் குவித்தது. தொடர்ந்து விளையாடிய கென்ட் 182 ரன்கள் மட்டுமே குவிக்க, 41 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
லேட்டஸ்ட் செய்திகள்
‘மாரீசன்’ படம் எப்படி இருக்கு? டிவிட்டர் விமர்சனம் இதோ!
July 24, 2025