இந்திய ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே 3-வது டெஸ்ட் போட்டி நேற்று சிட்னி மைதானத்தில் தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. தொடங்க வீரர்களாக வில் புகோவ்ஸ்கி, டேவிட் வார்னர் இருவரும் இறங்கினர்.
ஆட்டம் தொடக்கத்திலே 5 ரன்னில் விக்கெட்டை இழந்தார். இதைத்தொடர்ந்து, மார்னஸ் லாபுசாக்னே களமிறங்க இருவரும் கூட்டணி அமைத்து அணியின் எண்ணிக்கையை உயர்த்தினர். நிதானமாக விளையாடி வந்த வில் புகோவ்ஸ்கி அரைசதம் அடித்து 62 ரன்கள் எடுத்து பெவிலியன் திரும்பினார். பின்னர், ஸ்மித் களம் காண மார்னஸ், ஸ்மித் இருவரும் சிறப்பான ஆட்டத்தை விளையாடி வெளிப்படுத்தினர்.
நேற்றைய முதல்நாள் ஆட்ட முடிவில் ஆஸ்திரேலிய அணி 2 விக்கெட்டை இழந்து 55 ஓவர் முடிவில் 166 ரன்கள் எடுத்தனர். களத்தில் மார்னஸ் 67*, ஸ்மித் 31* ரன்களுடன் இருந்த நிலையில் இன்று 2-ம் நாள் ஆட்டம் தொடங்கியது. சிறப்பாக விளையாடிய மார்னஸ் சதம் அடிக்காமல் 91 ரன்னில் விக்கெட்டை இழந்தார். பின்னர், ஸ்மித் சதம் விளாசி 131 ரன்கள் குவித்தார். இதைத்தொடர்ந்து, இறங்கிய மற்ற வீரர்கள் நிலைத்து நிற்காமல் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தனர்.
இறுதியாக ஆஸ்திரேலிய அணி தனது முதல் இன்னிங்ஸில் 105.4 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 338 ரன்கள் எடுத்தனர். இந்திய அணியில் ஜடேஜா 4, பும்ரா நவ்தீப் சைனி தலா 2, முகமது சிராஜ் 1 விக்கெட்டை பறித்தனர்.
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…
காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…