ஆஷஸ் தொடர்: ஆஸ்திரேலிய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி..!

Published by
murugan

ஆஸ்திரேலிய அணி 5.1 ஓவரில் 1 விக்கெட்டை இழந்து 20 ரன் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஆஷஸ் தொடரின் முதல் போட்டி கடந்த 8-ஆம் தேதி தொடங்கியது. இரு அணிகளும் பிரிஸ்பேனில் உள்ள கபா மைதானத்தில் மோதியது. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பேட்டிங் தேர்வு செய்தனர். அதன்படி முதலில் இறங்கிய இங்கிலாந்து தனது முதல் இன்னிங்ஸில் 50.1 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 147 ரன்கள் மட்டுமே எடுத்தனர்.

ஆஸ்திரேலியா அணியில் கம்மின்ஸ் 5, ஹேசில்வுட், மிட்செல் ஸ்டார்க் தலா 2 விக்கெட்டை பறித்தனர். இதைத்தொடர்ந்து, 2-ஆம் நாள் ஆஸ்திரேலிய அணி தனது முதல் இன்னிங்க்ஸை தொடங்கியது. தொடர்ந்து விளையாடிய வந்த ஆஸ்திரேலியா அணி நேற்றைய ஆட்டத்தின் பாதியில் 104.3 ஓவரில் அனைத்து விக்கெட்டை இழந்து 425 ரன்கள் எடுத்தனர்.

ஆஸ்திரேலியா அணியில் அதிகப்பட்சமாக டிராவிஸ் ஹெட் 150, லேபஸ்சேகன் 74, டேவிட் வார்னர் 94 ரன்கள் எடுத்தனர். இங்கிலாந்து அணியில் ஒல்லி ராபின்சன், மார்க் வுட் தலா 3 , கிறிஸ் வோக்ஸ் 2 , ஜோ ரூட், ஜேக் லீச் ஆகியோர் தலா 1 விக்கெட் பறித்தனர். நேற்றைய மீதம் இருந்த நேரத்தில் இங்கிலாந்து அணி தனது 2-வது இன்னிங்க்ஸை தொடங்கியது.

தொடக்க வீரர்கள் ஹசீப் ஹமீத் 27, ரோரி பர்ன்ஸ் 13 ரன் எடுத்து பெவிலியன் திரும்பினர். அடுத்து ஜோடி சேர்ந்த டேவிட் மாலன் , ஜோ ரூட் இருவரும் அதிரடியாக விளையாடி அரைசதம் விளாசினர். 3-ஆம் நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து அணி 70 ஓவரில் 2 விக்கெட்டை இழந்து 220 ரன் எடுத்தனர். அப்போது ஆஸ்திரேலியா அணி 58 ரன் முன்னிலையில்  இருந்தது. களத்தில் டேவிட் மாலன் 80*, ஜோ ரூட் 86* ரன்களுடன் இருந்தனர்.

இந்நிலையில், இன்றை ஆட்டம் தொடங்கியதில் இருந்து இங்கிலாந்து விக்கெட்டை பறிகொடுக்க தொங்கியது. சிறப்பாக விளையாடிய டேவிட் மாலன் 82, ஜோ ரூட் 89 ரன் எடுத்து விக்கெட்டை இழக்க, பின்னர் அடுத்தடுத்து களம் கண்ட அனைத்து வீரர்களும் சொற்ப ரன் எடுக்க இறுதியாக இங்கிலாந்து 103 ஓவரில் அனைத்து விக்கெட்டை இழந்து 297 ரன்கள் மட்டுமே எடுத்தனர். இதனால், ஆஸ்திரேலிய அணிக்கு இலக்கு 20 ரன்கள் என நிர்ணயிக்கப்பட்டது.

பின்னர் இறங்கிய ஆஸ்திரேலிய அணி 5.1 ஓவரில் 1 விக்கெட்டை இழந்து 20 ரன் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 2-வது போட்டி வரும் 16-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

 

Published by
murugan
Tags: Ashes2021

Recent Posts

பாகிஸ்தானின் 4 விமான தளங்கள் மீது இந்தியா தாக்குதல்! போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன!

பாகிஸ்தானின் 4 விமான தளங்கள் மீது இந்தியா தாக்குதல்! போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன!

டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் எல்லைக்குள் இருந்த 9 பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா…

19 minutes ago

அதிகரிக்கும் போர் பதற்றம்., 32 விமான நிலையங்கள் மூடல்! மொத்த லிஸ்ட் இதோ…

டெல்லி : பஹல்காம் தாக்குதல், ஆப்ரேஷன் சிந்தூரை அடுத்து இந்தியா பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரிக்க…

1 hour ago

டார்கெட் வைத்த 26 பாகிஸ்தான் ட்ரோன்கள்! சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம்!

டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையேயான போர் பதற்றம் என்பது நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது.…

2 hours ago

மீண்டும் டிரோன்களை ஏவி தாக்க பாகிஸ்தான் முயற்சி… முறியடித்த இந்திய ராணுவம்!

காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…

12 hours ago

”மகன்களைக் கைவிட்ட ரவி மோகன்.., வீட்டை விட்டு வெளியேற்றுகிறார்” – கொந்தளித்த ஆர்த்தி.!

சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…

13 hours ago

”பயணிகள் விமானத்தை கேடயமாக பயன்படுத்தி பாக். ராணுவம் பெரும் இழப்புகளை சந்தித்தது” – வியோமிகா சிங்.!

டெல்லி :  ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…

13 hours ago