பந்து வீச்சில் மிரட்டிய நெதர்லாந்து… 87 ரன்கள் வித்தியாசத்தில் பங்களாதேஷ் தோல்வி..!

Published by
murugan

பங்களாதேஷ் அணி 42.2 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 142 ரன்கள் எடுத்து 87 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், இன்று  இரண்டு போட்டிகள் நடைப்பெற்றது. அதன்படி, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதிய  முதல் போட்டியில் ஆஸ்திரேலியா 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. எதைத்தொடர்ந்து நடைபெற்ற 2-வது போட்டியில் நெதர்லாந்து மற்றும் பங்களாதேஷ் அணிகள்  கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற நெதர்லாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் நெதர்லாந்து அணியின் தொடக்க வீரர்களாக விக்ரம்ஜித் சிங், மேக்ஸ் ஓ’டவுட்  களமிறங்கினார்கள். தொடக்க வீரர்கள் இருவரும் வந்த வேகத்தில் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினார்கள். மேக்ஸ் ஓ’டவுட் டக் அவுட் ஆகியும் , விக்ரம்ஜித் சிங் 3 ரன் எடுத்து விக்கெட்டை இழந்தனர். அதன்பிறகு வெஸ்லி பாரேசி மற்றும் அக்கர்மேன் களமிறக்க நிதானமாக விளையாடி வந்த அக்கர்மேன்  15 ரன்னில் ஆட்டமிழந்தார். இருப்பினும் மறுபுறம் விளையாடிய வெஸ்லி பாரேசி சிறப்பாக விளையாடி  41 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

அடுத்து மத்தியில் இறங்கிய ஸ்காட் எட்வர்ட்ஸ், சைப்ரண்ட் ஏங்கல்பிரெக்ட் நிதானமாக விளையாடி அணியின் எண்ணிக்கையை உயர்த்தினார். இதில் ஸ்காட் எட்வர்ட்ஸ் அரைசதம் கடந்து 68 ரன்கள் குவித்தார்.  பிறகு களமிறங்கிய அனைத்து வீரர்களும்  சொற்ப ரன்களில் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினார்கள். இறுதியில் நெதர்லாந்து அணி 50 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 229 ரன்கள் எடுத்தனர். பங்களாதேஷ் அணியில் முஸ்தாபிசுர் ரஹ்மான், மஹேதி ஹசன், ஷோரிஃபுல் இஸ்லாம், தஸ்கின் அகமது ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

பங்களாதேஷ் அணி 230 ரன்கள் என்ற இலக்குடன் தொடக்க வீரர்களாக லிட்டன் தாஸ், தன்சித் ஹசன் இருவரும் களமிறங்கினர். ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலே 5-வது ஓவரில் லிட்டன் தாஸ் 3 ரன் எடுத்து விக்கெட்டை இழந்தார். பின்னர் மெஹிதி ஹசன் களமிறங்க மறுபுறம் விளையாடி வந்த மெஹிதி ஹசன்  அடுத்த ஓவரில் 15 ரன் எடுத்து வெளியேறினர். அடுத்து நஜ்முல் ஹொசைன் இறங்க ஒரு புறம்  மெஹிதி ஹசன்  சிறப்பாக விளையாட மறுபுறம் நஜ்முல் நிதானமாக விளையாடி வந்தார்.

இருப்பினும் நஜ்முல் ஹொசைன் 18 பந்தில் 9 ரன் எடுத்து பெவிலியன் திரும்பினார். அடுத்து வந்த அதிரடி வீரர்கள்  கேப்டன் ஷகிப் அல் ஹசன் 5, விக்கெட் கீப்பர் முஷ்பிகுர் ரஹீம் 1 ரன் எடுத்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்து  நடையை கட்டினர். இதற்கிடையில் மஹ்முதுல்லாஹ் மட்டும் 20 ரன்கள் எடுக்க மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேற இறுதியாக பங்களாதேஷ் அணி 42.2 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 142 ரன்கள் எடுத்து 87 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

நெதர்லாந்து அணியில் பால் வான் மீகெரென் 4 விக்கெட்டையும், பாஸ் டி லீடே 2 விக்கெட்டையும் பறித்தனர். நெதர்லாந்து அணி  6 போட்டிகளில் விளையாடி 2 போட்டிகளில் வெற்றியும் , 4 போட்டிகளில் தோல்வியடைந்து 4 புள்ளிகளுடன் 8 -வது இடத்தில் உள்ளது. பங்களாதேஷ் அணி 6 போட்டிகளில் விளையாடி 1 போட்டியில் வெற்றியும் , 5 போட்டிகளில் தோல்வியடைந்து 2 புள்ளிகளுடன் 9 -வது இடத்தில் உள்ளது.

Published by
murugan

Recent Posts

பட்டுக்கோட்டையில் பரபரப்பு! பாஜக பெண் நிர்வாகி தலை துண்டித்து கொடூர கொலை!

தஞ்சாவூர் : நேற்று (மே 5) இரவு தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள உதயசூரியபுரத்தில் பெண் ஒருவர் தலை…

25 minutes ago

கடலுக்கு அடியில் MIGM கண்ணிவெடி? இந்திய கடற்படையின் அசத்திய சோதனை வெற்றி!

டெல்லி : பஹல்கால் தாக்குதலுக்கு பிறகு இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம்…

50 minutes ago

திருவிழா பிரச்சனையா? இரு தரப்பினர் மோதல்., வீடுகளுக்கு தீ வைப்பு! புதுக்கோட்டை காவல்துறை விளக்கம்!

புதுக்கோட்டை : நேற்று (மே 5) புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே வடகாடு பகுதியில் உள்ள முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவின்…

2 hours ago

SRH vs DC : குறுக்கே வந்த கௌசிக்(மழை).., பிளே ஆப் வாய்ப்பை இழந்த ஹைதராபாத்.!

ஹைதராபாத் : ஐபிஎல் 2025-55 வது ஹைதராபாத்-டெல்லி இடையேயான போட்டி மழையின் காரணமாக கைவிடப்பட்டது. இதனால் இரு அணிகளுக்கும் தலா…

10 hours ago

ஹைதராபாத்தில் வெளுத்து வாங்கும் கனமழை.., போட்டி தொடங்குவதில் தாமதம்.!

ஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று…

10 hours ago

SRH vs DC : 3 விக்கெட்களை தூக்கிய கம்மின்ஸ்.., ரன் எடுக்க முடியாமல் திணறிய டெல்லி.!

ஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று…

12 hours ago