சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் வேகப்பந்து வீச்சார் புவனேஷ்வர் குமார், நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து காயம் காரணமாக விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை சூப்பர் அணி ஐதராபாத் அணிக்கு எதிரான ஆட்டம் கடந்த வெள்ளிக்கிழமை நடந்தது இந்த ஆட்டத்தில் தனது 4வது ஓவரை வீச முடியாமல் சிரமப்பட்டார் வேகபந்து வீச்சாளர் புவனேஷ்வர் (இன்னிங்சின் 19வது ஓவர்), உடற்தகுதி வல்லுநர்கள் ஆலோசனையின் படி அந்த போட்டியில் இருந்து அவர் வெளியேறினார். இதனால் எஞ்சிய ஓவரின் 5 பந்துகளை கலீல் அகமது வீசினார்.
இந்நிலையில், அவருக்கு நடத்தப்பட்ட மருத்துவப் பரிசோதனையில் அவருக்கு தொடையில் காயம் ஏற்பட்டிள்ளது தெரியவந்தது. இதனால் அவர் இத்தொடரில் இருந்து விலகி உரிய சிகிச்சை எடுக்க, ஓய்வு எடுக்க அறிவுறுத்திய நிலையில் அவர் தொடரில் இருந்து விலகியுள்ளார்.ஐதராபாத் அணியின் வீரர் மிட்செல் மார்ஷ் (ஆஸ்திரேலியா) காயம் காரணமாக ஏற்கனவே விலகியுள்ள நிலையில் தற்போது புவனேஸ்வரகுமாரும் காயம் காரணமாக விலகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
லண்டன் : இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், எட்ஜ்பாஸ்டனில் நடந்த இரண்டாவது டெஸ்டில் இந்தியா 336…
டெல்லி : எய்ம்ஸ் ராய்ப்பூரைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்களான டாக்டர் ஆஷிஷ் கோப்ரகடே மற்றும் டாக்டர் எம். ஸ்வாதி ஷெனாய் ஆகியோர்,…
சென்னை : தமிழ்நாட்டில் பி.எட். (கல்வியியல் இளங்கலை) படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் ஜூலை 21, 2025…
லண்டன் : நாளை (ஜூலை 10, 2025) லண்டனில் உள்ள புகழ்பெற்ற லார்ட்ஸ் மைதானத்தில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும்…
சென்னை : தமிழ்நாட்டின் தூத்துக்குடியில் விரைவில் திறக்கப்பட உள்ள வின்ஃபாஸ்ட் ஆட்டோ இந்தியாவின் மின்சார வாகன உற்பத்தி ஆலைக்கு, ‘நான்…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், உக்ரைனுக்கு மேலதிக ஆயுதங்களை அனுப்புவதற்கு ஒப்புதல் அளித்த பிறகு, ரஷ்ய அதிபர்…