#BREAKING: பாகிஸ்தானை வீழ்த்தி ஹாட்ரிக் வெற்றி பெற்ற இந்தியா ..!

Published by
murugan

இந்திய அணி 30.3 ஓவரில் 3 விக்கெட்டை இழந்து 192 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஒருநாள் உலகக்கோப்பை தொடரின் 12-ஆவது லீக் போட்டியில் இந்திய அணியும், பாகிஸ்தான் அணியும் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில், டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பாகிஸ்தான் அணி பேட்டிங் செய்தது. பாகிஸ்தான் அணியின் தொடக்கவீரர்களாக அப்துல்லா ஷபீக், இமாம்-உல்-ஹக் இருவரும் களமிறங்கினர். அப்துல்லா ஷபீக் வந்த வேகத்தில் 20 ரன்களில் விக்கெட்டை இழந்தார்.

பின்னர் கேப்டன் பாபர் அசாம் களமிறங்க நிதானமான விளையாடிய வந்த  இமாம்-உல்-ஹக் 36 ரன்கள் எடுத்து ஹர்திக் பாண்டியா ஓவரில் ராகுலிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். பின், கேப்டன் பாபர் அசாம் மற்றும் முகமது ரிஸ்வான்கை கோர்த்து சிறப்பாக விளையாடி அணியின் எண்ணிக்கையை உயர்த்தினார். பாபர் அசாம்  சிறப்பாக விளையாடி அரைசதம் விளாசி பெவிலியன் திரும்பினார்.  மறுபுறம் விளையாடிய முகமது ரிஸ்வான் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 49 ரன்கள் எடுத்து அரைசதம் அடுக்கமால்  போல்ட் ஆனார்.

பின்னர் களமிங்கிய அனைத்து பாகிஸ்தான் வீரர்களும் இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் விக்கெட்டை இழந்தனர். இறுதியாக பாகிஸ்தான் 42.5 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து  191 ரன்கள் எடுத்தது. இந்திய அணியில் ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ், குல்தீப் யாதவ், ரவீந்திர ஜடேஜா மற்றும் ஹர்திக் பாண்டியா தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.  192 ரன்கள்  இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது.தொடக்க வீரர்களாக ரோஹித் சர்மா, சுப்மன் கில் இருவரும் களமிறங்கினர்.

முதல் 2 போட்டியில் டெங்கு காய்ச்சல் காரணமாக களமிறங்காத சுப்மன் கில் இன்றைய போட்டியில் களமிறங்கினார்.  சுப்மன் கில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார்கள் என ரசிகர்கள் எதிர்பார்த்து நிலையில் களமிறங்கிய சிறிது நேரத்தில்  4  பவுண்டரி அடித்து 16 ரன்னில் விக்கெட்டை பறிகொடுத்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார். அடுத்து விராட் கோலி களமிறங்க ரோஹித் சர்மா இருவரும் நிதானமான இடத்தை வெளிப்படுத்தினர். இப்போட்டியில் 36 பந்தில் தனது அரை சதத்தை ரோகித் சர்மா நிறைவு செய்தார்.

இருப்பினும் மறுபுறம் விளையாடிய கோலி 18 பந்தில் மூன்று பவுண்டரி என 16 ரன்னில் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார். அடுத்து ஷ்ரேயாஸ் ஐயர் களமிறங்க அவருடன் இணைந்த ரோஹித் அதிரடியாக விளையாடினர். சிறப்பாக விளையாடி வந்த ரோஹித் 86 ரன்னில் விக்கெட்டை இழந்தார். அதில் 6 பவுண்டரி, 6 சிக்ஸர் அடக்கும். அவர்கள் இருவரின் கூட்டணியில் 77 ரன்கள் சேர்த்தனர்.  ஒருநாள் போட்டிகளில் 300 சிக்சர்களை அடித்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையை ரோஹித் ஷர்மா பெற்றுள்ளார்.

மறுபுறம் களத்தில் இருந்த ஷ்ரேயாஸ் ஐயர் நிதானமாகவும், சிறப்பாகவும் விளையாடி 63 பந்தில் அரைசதம் அடித்து 53* ரன்களுடன் களத்தில் கடைசிவரை இருந்தார். இறுதியாக இந்திய அணி 30.3 ஓவரில் 3 விக்கெட்டை இழந்து 192 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பாகிஸ்தான் அணி ஷஹீன் அப்ரிடி 2 விக்கெட்டும், ஹசன் அலி 1 விக்கெட் எடுத்தனர். இந்திய அணி விளையாடிய 3 போட்டியிலும் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. பாகிஸ்தான் அணி விளையாடிய 3 போட்டியில்  2 வெற்றியும், 1 போட்டியில் தோல்வியடைந்துள்ளது.

Published by
murugan
Tags: #INDvPAK

Recent Posts

பாகிஸ்தானுக்கு சிந்து நதி தண்ணீர் நிறுத்தம்? புதிதாக 6 அணைகள் கட்ட அரசு திட்டம்!

டெல்லி : ஏப்ரல் 22 காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்ற நடவடிக்கைகள்…

48 minutes ago

Live : சென்னை ED ரெய்டு முதல்.. இந்தியா – பாகிஸ்தான் போர் பதற்றம் வரை…

சென்னை : சென்னையில் இன்று காலை முதலே கோயம்பேடு,  தி நகர், அசோக் நகர், சாலிகிராமம், விருகம்பாக்கம் ஆகிய பல்வேறு…

3 hours ago

வான்வெளி தாக்குதல்., சைரன் ஒலி., பதுங்கு குழிகள்! நாளை நாடு முழுவதும் போர்க்கால ஒத்திகை!

டெல்லி : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு…

3 hours ago

பட்டுக்கோட்டையில் பரபரப்பு! பாஜக பெண் நிர்வாகி தலை துண்டித்து கொடூர கொலை!

தஞ்சாவூர் : நேற்று (மே 5) இரவு தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள உதயசூரியபுரத்தில் பெண் ஒருவர் தலை…

4 hours ago

கடலுக்கு அடியில் MIGM கண்ணிவெடி? இந்திய கடற்படையின் அசத்திய சோதனை வெற்றி!

டெல்லி : பஹல்கால் தாக்குதலுக்கு பிறகு இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம்…

5 hours ago

திருவிழா பிரச்சனையா? இரு தரப்பினர் மோதல்., வீடுகளுக்கு தீ வைப்பு! புதுக்கோட்டை காவல்துறை விளக்கம்!

புதுக்கோட்டை : நேற்று (மே 5) புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே வடகாடு பகுதியில் உள்ள முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவின்…

6 hours ago