Brian Lara About Ms Dhoni [File Image]
Brian Lara : 42 வயதிலும் தோனி இப்படி விளையாடுவது வியப்பை ஏற்படுத்தி உள்ளது என பிரையன் லாரா கூறியுள்ளார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் வீரர் தோனி இந்த சீசன் ஐபிஎல் போட்டிக்களில் கடைசி ஓவர்களில் களமிறங்கி சிக்ஸர்களை விளாசி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி கொண்டு இருக்கிறார். கடைசியாக லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் கூட 2 சிக்ஸர்கள் 3 பவுண்டரி என 9 பந்துகள் விளையாடி 28 ரன்கள் அடித்து இருந்தார்.
42 வயதில் இப்படி ஒரு வீரர் விளையாடுவது ஆச்சரியமாக இருக்கிறது என அவருடைய ரசிகர்கள் மற்றும் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் அவரை பாராட்டி பேசி வருகிறார்கள். அந்த வகையில், முன்னாள் மேற்கிந்திய கிரிக்கெட் வீரர் பிரையன் லாரா ஜியோ சினிமாவுக்கு அளித்த பேட்டியில் தோனியை பற்றி பேசியுள்ளார்.
இது குறித்து பேசிய அவர் ” இந்த சீசனில் தோனியின் ஆட்டம் மிகவும் புத்திசாலித்தனமாக இருக்கிறது. அவருடைய பேட்டிங்கை பார்த்துவிட்டு அவரிடம் நான் கேட்க விரும்புவது ஒன்றே ஒன்று தான் தோனி நீங்கள் அதிகமாக பேட் செய்ய விரும்புகிறீர்களா? என்று தான். அந்த அளவுக்கு அவருடைய ஆட்டம் அருமையாக இருக்கிறது. அவருடைய பங்களிப்பு அணிக்கு ரொம்பவே உதவுகிறது.
42 வயதில் ஒரு மனிதர் இப்படியெல்லாம் அதிரடியா விளையாட முடியுமா என்ற கேள்விக்கு என்னுடைய மனதில் ஓடிக்கொண்டு இருக்கிறது. இளம் வீரர்கள் எல்லாம் தோனி கிட்ட இருந்து கற்றுக்கொள்ளவேண்டும். இரவு நேரங்களில் தோனி இந்த மாதிரி விளையாடுவதை பார்க்கையில் வியப்பாக இருக்கிறது.
மும்பை அணிக்கு எதிராக அவர் விளையாடிய விளையாட்டு மிகவும் நன்றாக இருந்தது. கடைசி ஓவரில் தான் அவருக்கு பேட் செய்ய வாய்ப்பு கிடைத்தது. அந்த வாய்ப்பையும் சரியாக பயன்படுத்தி கொண்டு பந்தை சிக்ஸர்களுக்கு பறக்கவிட்டு 200 ரன்களுக்கு மேலே அணியை எடுத்துச்சென்றார். இன்னுமே சீக்கிரமாக அவர் களமிறங்கி இருந்தால் அந்த போட்டியில் சென்னை அணிக்கு இன்னுமே ரன்கள் சேர்ந்திருக்கும்.
கிடைக்கும் வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தி கடைசி நேரத்தில் வந்து சிக்ஸர்கள் விளாசுவது தான் விளையாட்டின் அற்புதமான பகுதி என்று நான் சொல்வேன். 42 வயதில் இவரை போல யாரவது விளையாடமுடியுமா என்று நான் யோசிக்கிறேன். தோனி இன்னும் ஓய்வு பெறாமல் எத்தனை ஆண்டுகள் விளையாட போகிறார் என்று தெரியவில்லை. அவர் இருக்கும் ஐபிஎல் போட்டிகளில் விளையாடி கொண்டு இருக்கும் வரை ரசிகர்களை இப்படி மகிழ்வித்து கொண்டே தான் இருப்பார்” எனவும் பிரையன் லாரா பாராட்டி பேசியுள்ளார்.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…