#image_title
ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரின் இன்றைய இரவு போட்டியில் லக்னோ அணியும், டெல்லி அணியும் மோதுகிறது.
நடப்பாண்டில் ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும், டெல்லி கேபிட்டல்ஸ் அணியும் தற்போது லக்னோவில் உள்ள பாரத் ரத்னா மைதானத்தில் மோதவுள்ளது. இந்த போட்டியில் தற்போது டாஸ் வென்ற லக்னோ அணி பேட்டிங்கை தேர்வு செய்து உள்ளது. லக்னோ அணியின் பலமான யுக்தியை இந்த போட்டியிலும் கேப்டன் கே.எல்.ராகுல் இந்த முடிவை எடுத்துள்ளார்.
இந்த தொடரில் தற்போது வரை ஒரே ஒரு போட்டியில் மட்டும் வெற்றி பெற்றுள்ள டெல்லி அணி புள்ளிப்பட்டியலில் 3-வதாக இருக்கும் லக்னோ அணியை இன்று எதிர் கொள்கிறது. டெல்லி அணி வருகிற அனைத்து போட்டியிலும் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற முனைப்பில் இந்த போட்டியில் களமிறங்குகிறது. இதனால் இந்த போட்டியில் சற்று விறுவிறுப்பு அதிகவே இருக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
லக்னோ அணியில் வேக பந்து வீச்சாளரான மாயங்க் யாதவ் இன்றைய போட்டியில் காயம் காரணமாக வெளியேறி உள்ளதால் அவருக்கு பதிலாக அர்ஷத் கான் களமிறங்க உள்ளார். மேலும், டெல்லி அணியில் காயம் காரணமாக வெளியேறி இருந்த நட்சத்திர பிந்து வீச்சாளர்களான குலதீப் யாதவும், முகேஷ் குமாரும் மீண்டும் அணியில் இடம் பெற்றுள்ளனர்.
குயின்டன் டி காக், கே.எல். ராகுல் (விக்கெட் கீப்பர் / கேப்டன்), தேவ்தத் படிக்கல், மார்கஸ் ஸ்டோனிஸ், நிக்கோலஸ் பூரன், ஆயுஷ் படோனி, க்ருனால் பாண்டியா, அர்ஷத் கான், ரவி பிஷ்னோய், நவீன்-உல்-ஹக், யாஷ் தாக்கூர்
ப்ரித்வி ஷா, டேவிட் வார்னர், ஷாய் ஹோப், ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர் / கேப்டன்), டிரிஸ்டன் ஸ்டப்ஸ், அக்சர் படேல், ஜேக் ஃப்ரேசர்-மெக்குர்க், குல்தீப் யாதவ், முகேஷ் குமார், இஷாந்த் சர்மா, கலீல் அகமது
வாஷிங்டன் : இஸ்ரேல் மற்றும் ஈரானும் ஜூன் மாதம் மாறி மாறி தாக்குதல் நடத்தியது. கிட்டத்தட்ட இரண்டு நாடுகளும் 12 நாட்கள்…
சென்னை : கோக்கைன் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கின் விசாரணை மேலும் தீவிரமாகிறது. ஸ்ரீகாந்த்…
சென்னை : தமிழக அரசு, அரசுப் பணிகளில் பதவி உயர்வு வழங்கும்போது மாற்றுத்திறனாளிகளுக்கு 4 சதவீத இட ஒதுக்கீடு வழங்க…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானிடமிருந்து சீனா தொடர்ந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யலாம் என்று தனது Truth…
பாமக உட்கட்சி விவகாரம் என்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், கட்சியின் ஆதரவாளர்கள் எந்த பக்கம் செல்வது…
சென்னை : தமிழக வெற்றிக் கழக (தவெக) தலைவர் நடிகர் விஜய், வரும் ஆகஸ்ட் 15, 2025 முதல் தமிழ்நாடு முழுவதும்…