மீண்டும் டி20 அணியில் கேப்டன் கேன் வில்லியம்சன்!

Published by
பாலா கலியமூர்த்தி

14 மாத இடைவெளிக்கு பிறகு நியூசிலாந்து டி20 அணியில் மீண்டும் கேப்டனாக கேன் வில்லியம்சன் இடம்பெற்றுள்ளார். வரும் 12ம் தேதி முதல் பாகிஸ்தானுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் நியூசிலாந்து அணி விளையாட உள்ளது. இந்த தொடருக்கான நியூசிலாந்து அணி அறிவிக்கப்பட்டது. அதில், டி20 உலகக் கோப்பைக்கு பிறகு கேப்டனாக கேன் வில்லியம்சன் நியூசிலாந்து டி20 அணிக்கு திரும்பியுள்ளார்.

கடைசியாக 2022 நவம்பர் 20ம் தேதி டி20 போட்டியில் விளையாடிய நிலையில், தற்போது 14 மாதங்களுக்கு பிறகு மீண்டும் கேன் வில்லியம்சன் நியூசிலாந்து டி20 அணியில் கேப்டனாக இடம்பெற்றுள்ளது கிரிக்கெட் உலகில் எதிர்பார்ப்பை தூண்டியுள்ளது. நியூசிலாந்து கிரிக்கெட் அணிக்கு அவர் கொண்டு வரும் திறமை மற்றும் தலைமைத்துவத்திற்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

நியூசிலாந்து கிரிக்கெட்டின் இந்த முக்கிய தருணம் ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் ஆர்வலர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. நியூசிலாந்து அணியின் மதிப்பிற்குரிய கேப்டனான கேன் வில்லியம்சன், சமீப காலமாக இல்லாதது அணியின் தலைமைத்துவத்தில் மட்டுமல்ல, அவர்களின் ஆட்டத்திலும் உணரப்பட்டது. கேன் வில்லியம்சனின் தலைமை, யுத்தி என பல்வேறு அம்சங்கள் நியூசிலாந்து அணியில் இல்லாமல், தடுமாறியது.

INDVSSA: 2-வது டெஸ்ட் போட்டி இன்று! இந்திய அணியில் இரண்டு மாற்றங்கள்?

இந்தாண்டு ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடர் நடைபெற உள்ள நிலையில், தற்போது, பாகிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரில் நியூசிலாந்து அணியின் கேப்டனாக மீண்டும் கேன் வில்லியம்சன் திரும்பி இருப்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. கேப்டன் வில்லியம்சன் திரும்பியது தனிப்பட்ட வெற்றி மட்டுமல்ல, இது ஒட்டுமொத்த அணிக்கும் ஊக்கமளிக்கும் முடிவாகும்.

களத்திற்கு உள்ளேயும், வெளியேயும் அவரது தலைமையானது அணியில் நம்பிக்கையையும், ஊக்கத்தையும் ஏற்படுத்தும்.  கடந்த ஐபிஎல் 2023 சீசனில் கேன் வில்லியம்சனுக்கு முழங்காளில் காயம் ஏற்பட்டது. அதன்பிறகு நீண்ட காலம் கிரிக்கெட்டில் இருந்து விலகி ஓய்வில் இருந்தார்.  ஒருநாள் உலகக் கோப்பையில் சரிவர விளையாட முடியவில்லை. இதற்கு பிறகு, வங்கதேசதுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இடம் பெற்றிருந்த நிலையில், ஒருநாள் மற்றும் டி20 தொடரில் அவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டது.

இப்போது மீண்டும் நியூசிலாந்து டி20 அணிக்கு திரும்பி உள்ளது வலுவாக பார்க்கப்படுகிறது. எனவே, பாகிஸ்தான் அணி நியூசிலாந்துக்கு எதிராக ஜனவரி 12 முதல் ஜனவரி 21 வரை 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. கேப்டனாக கேப்டன் வில்லியம்சன் செயல்பட உள்ளார்.

நியூசிலாந்து அணி: கேன் வில்லியம்சன் (கேப்டன்), டெவோன் கான்வே, ஃபின் ஆலன், டிம் சீஃபர்ட், டேரில் மிட்செல், கிளென் பிலிப்ஸ், மார்க் சாப்மேன், ஜோஷ் கிளார்க்சன், மிட்செல் சான்ட்னர், மாட் ஹென்றி, இஷ் சோதி, டிம் சவுத்தி, லாக்கி பெர்குசன், ஆடம் சியர்ஸ் ஆகியோர் உள்ளனர்.

Recent Posts

பட்டுக்கோட்டையில் பரபரப்பு! பாஜக பெண் நிர்வாகி தலை துண்டித்து கொடூர கொலை!

தஞ்சாவூர் : நேற்று (மே 5) இரவு தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள உதயசூரியபுரத்தில் பெண் ஒருவர் தலை…

10 minutes ago

கடலுக்கு அடியில் MIGM கண்ணிவெடி? இந்திய கடற்படையின் அசத்திய சோதனை வெற்றி!

டெல்லி : பஹல்கால் தாக்குதலுக்கு பிறகு இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம்…

35 minutes ago

திருவிழா பிரச்சனையா? இரு தரப்பினர் மோதல்., வீடுகளுக்கு தீ வைப்பு! புதுக்கோட்டை காவல்துறை விளக்கம்!

புதுக்கோட்டை : நேற்று (மே 5) புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே வடகாடு பகுதியில் உள்ள முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவின்…

2 hours ago

SRH vs DC : குறுக்கே வந்த கௌசிக்(மழை).., பிளே ஆப் வாய்ப்பை இழந்த ஹைதராபாத்.!

ஹைதராபாத் : ஐபிஎல் 2025-55 வது ஹைதராபாத்-டெல்லி இடையேயான போட்டி மழையின் காரணமாக கைவிடப்பட்டது. இதனால் இரு அணிகளுக்கும் தலா…

9 hours ago

ஹைதராபாத்தில் வெளுத்து வாங்கும் கனமழை.., போட்டி தொடங்குவதில் தாமதம்.!

ஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று…

10 hours ago

SRH vs DC : 3 விக்கெட்களை தூக்கிய கம்மின்ஸ்.., ரன் எடுக்க முடியாமல் திணறிய டெல்லி.!

ஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று…

11 hours ago