CSKvSRH [file image]
IPL2024: ஹைதராபாத் அணி 18.5 ஓவரில் அனைத்து விக்கெட்டை இழந்து 134 ரன்கள் எடுத்தனர். இதனால் சென்னை அணி 78 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இன்றைய போட்டியில் ஹைதராபாத் அணியும், சென்னை அணியும் மோதியது. இந்த போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி முதலில் பந்து வீச தேர்வு செய்தனர். அதன்படி முதலில் களமிறங்கிய சென்னை அணி 20 ஓவரில் 3 விக்கெட்டைகளை இழந்து 212 ரன்கள் குவித்தது.
இதில் அதிகபட்சமாக கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் 98 ரன்களும், டேரில் மிட்செல் 52 ரன்களும், சிவம் துபே 39* ரன்கள் எடுத்து கடைசிவரை களத்தில் ஆட்டமிழக்காமல் இருந்தார். ஹைதராபாத் அணியில் புவனேஸ்வர் குமார், நடராஜன், ஜெய்தேவ் உனத்கட் தலா ஒரு விக்கெட்டை பறித்தனர்.
213 ரன்கள் இலக்குடன் ஹைதராபாத் அணியின் தொடக்க வீரர்களாக டிராவிஸ் ஹெட், அபிஷேக் சர்மா இருவரும் களமிறங்கினர். முதல் பந்தில் டிராவிஸ் ஹெட் பவுண்டரி அடித்தார். இருப்பினும் அந்த ஓவரில் 7 ரன்கள் மட்டுமே சென்றது. பின்னர் அடுத்த ஓவரை துஷார் தேஷ்பாண்டே வீசினார்.
அந்த ஓவரில் முதல் மற்றும் 3-வது பந்தில் சிக்ஸர் சென்ற நிலையில் அதே ஓவரின் 5-வது பந்தில் தொடக்க வீரர் டிராவிஸ் ஹெட் சிக்ஸர் அடிக்க முயன்ற போது டேரில் மிட்செல்லிடம் கேட்சை கொடுத்து வெளியேறினார். அடுத்து வந்த இம்பாக்ட் பிளேயர் அன்மோல்பிரீத் சிங் கோல்டன் டக் அவுட் ஆகி வெளியேறினார்.
அடுத்து ஐடன் மார்க்ராம் களமிறங்க நிதானமாக விளையாடி வந்த தொடக்க வீரர் அபிஷேக் சர்மா சிக்ஸர் அடிக்க முயன்ற போது பவுண்டரி லைனில் இருந்த டேரில் மிட்செல்லிடம் கேட்சை கொடுத்து விக்கெட்டை இழந்தார். அடுத்து வந்த நிதிஷ் ரெட்டி வந்த வேகத்தில் வெறும் 15 ரன்கள் தோனியிடம் கேட்சை கொடுத்து நடையை காட்டினார்.
10-வது ஓவரை மதீஷ பத்திரனா விளாசினார். அந்த ஓவரின் 5-வது பந்தில் ஐடன் மார்க்ராம் போல்ட் ஆகி 32 ரன்களில் வெளியேறினார். அடுத்து வந்த அதிரடி வீரர் கிளாசென் களத்தில் இறங்கியது முதல் நிதானமாக விளையாடி வந்த நிலையில் 20 ரன் எடுத்து பெவிலியன் திரும்பினார்.
அடுத்து வந்த பாட் கம்மின்ஸ் 5 , ஷாபாஸ் அகமது 7 ரன்களில் நடையை கட்ட இறுதியாக ஹைதராபாத் அணி 18.5 ஓவரில் அனைத்து விக்கெட்டை இழந்து 134 ரன்கள் எடுத்தனர். இதனால் சென்னை அணி 78 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
சென்னை அணியில் துஷார் தேஷ்பாண்டே 4 விக்கெட்டையும் மதீஷ பத்திரனா, முஸ்தாபிசுர் ரஹ்மான் தலா 2 விக்கெட்டையும், ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர் தலா 1 விக்கெட்டை பறித்தனர்.
இரு அணிகளும் தலா 9 போட்டிகளில் விளையாடி உள்ளனர். இதில் இரு அணிகளும் தலா 5 போட்டிகளில் வெற்றியும், 4 போட்டிகளில் தோல்வியையும் தழுவி உள்ளது.
சென்னை : தமிழ்நாட்டில் மருத்துவக் கழிவுகளை அனுமதியின்றி கொட்டுவது கடுமையான குற்றமாகக் கருதப்படுகிறது. இதற்காக, தமிழ்நாடு அரசு குண்டர் சட்டத்தின்…
சென்னை : ஆளுநர் மாளிகையில் கடந்த ஜூலை 13-ம் தேதி அன்று நடைபெற்ற மருத்துவர் தின நிகழ்ச்சியில், தமிழக ஆளுநர்…
மயிலாடுதுறை : மயிலாடுதுறையில் அரசு நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ''மாண்புமிகு பத்து தோல்வி பழனிசாமி அவர்களே, 2019ஆம் ஆண்டிலிருந்து…
மயிலாடுதுறை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மயிலாடுதுறையில் நடைபெற்ற அரசி நிகழ்ச்சியில் பங்கேற்று பேசியபோது, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி…
சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தின் ஓரிரு இடங்களில் நாளை மணிக்கு 40 முதல்…
மயிலாடுதுறை : மயிலாடுதுறை மாவட்டம் வழுவூரில் அமைக்கப்பட்டுள்ள முத்தமிழறிஞர் கலைஞர் திருவுருவச்சிலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார். பின்னர், மயிலாடுதுறை மாவட்டத்தில்…