”மருத்துவ கழிவுகளை கொட்டினால் குண்டர் சட்டம் பாயும்” – தமிழ்நாடு அரசு அறிவிப்பு.!
நீர் நிலைகள், பொது இடங்களில் மருத்துவக் கழிவுகளைக் கொட்டினால் குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்ற சட்டம் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.

சென்னை : தமிழ்நாட்டில் மருத்துவக் கழிவுகளை அனுமதியின்றி கொட்டுவது கடுமையான குற்றமாகக் கருதப்படுகிறது. இதற்காக, தமிழ்நாடு அரசு குண்டர் சட்டத்தின் கீழ், தண்டனை விதிக்கும் சட்டத்தை அமல்படுத்தியுள்ளது. 2025 மே மாதம் நடைபெற்ற சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் இந்த சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டு, ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார்.
இதன்படி, மருத்துவக் கழிவுகளை, குறிப்பாக அண்டை மாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டில் கொட்டுவோர் மீது விசாரணையின்றி குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவர். இதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்ற சட்டம் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் சட்டப்பேரவையில் சட்டத்திருத்த சட்டப்பேரவையில் சட் மசோதா கொண்டுவரப்பட்ட நிலையில், கடந்த ஜூலை 8ம் தேதி முதல் சட்டத்திருத்தம் அமலுக்கு வந்தது.
மருத்துவ கழிவுகளை கொட்டினால் குண்டாஸ்
ஜூலை 8 தேதி முதல் சட்ட திருத்தம் அமலுக்கு வந்ததாக தமிழ்நாடு அரசு அறிவிப்பு
சட்ட திருத்தம் கடந்த ஏப்ரல் மாதம் சட்டப்பேரவையில் அறிமுகம் செய்யப்பட்டது
இதற்கு ஜூன் மாதம் ஆளுநர் ஆர்.என். ரவி ஒப்புதல் அளித்து இருந்தார்@sa_jay_ravi pic.twitter.com/8swvLPmtM3
— Kannan Jeevanantham (JK) (@Im_kannanj) July 16, 2025
இந்த நடவடிக்கை, சுற்றுச்சூழல் மாசுபாடு, நோய் பரவல் மற்றும் நிலத்தடி நீர் பாதிப்பு போன்றவற்றைத் தடுக்கும் நோக்கில் அமல்படுத்தப்பட்டுள்ளது. அண்மையில், கேரளாவில் உள்ள மருத்துவமனைகளில் இருந்து சேகரிக்கப்படும் கழிவுகள் தமிழ்நாட்டின் எல்லைப் பகுதிகளில் கொட்டப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன.
இதைத் தடுக்க, அரசு அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்கள் மூலம் மருத்துவக் கழிவுகளை சேகரித்து, உயர் வெப்பநிலை எரிப்பான்கள் (இன்சினரேட்டர்கள்) அல்லது மைக்ரோவேவ் முறைகள் மூலம் அழிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
“இவ்வளவு அசிங்கப்பட்டுமா அந்தக் கூட்டணியில் தொடரணுமா?” விசிக, கம்யூ. கட்சிகளுக்கு இபிஎஸ் அழைப்பு.!
July 16, 2025
சிரியா மீது இஸ்ரேல் பயங்கர தாக்குதல்.! “சிரியா எல்லையில் இஸ்ரேல் மக்கள் இருக்கவேண்டாம்” – நெதன்யாகு எச்சரிக்கை.!
July 16, 2025
நாளை (ஜூலை 17) திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்.!
July 16, 2025