கொல்கத்தா அணி 19.1 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டை பறிகொடுத்து 202 ரன்கள் எடுத்து 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
இன்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கொல்கத்தா அணியும் மும்பை வான்கடே மைதானத்தில் மோதியது. டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பந்து வீச தேர்வு செய்தனர்.
முதலில் இறங்கிய சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 220 ரன்களை எடுத்தனர். சென்னையில் அதிகபட்சமாக டு பிளெசிஸ் 95* ருதுராஜ் 64 ரன்கள் எடுத்தனர். 221 ரன்கள் இலக்குடன் கொல்கத்தா அணியின் தொடக்க வீரராக நிதீஷ் ராணா, சுப்மான் கில் இருவரும் களமிறங்கினர்.
ஆனால் ஆட்டம் தொடக்கத்திலேயே சுப்மான் கில் டக் அவுட்டானார். அதன் பின்னர் ராகுல் திரிபாதி களமிறங்கினார். அடுத்த சில நிமிடங்களில் நிதீஷ் ராணா 9 ரன்னில் விக்கெட்டை இழந்தார். பின்னர், மோர்கன் 7 மற்றும் சுனில் நரைன் 4, ராகுல் திரிபாதி 8 ரன்னில் அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்தனர். இதனால், கொல்கத்தா அணி 31 ரன்னில் 5 விக்கெட்டை கொடுத்தனர்.
பின்னர், மத்தியில் இறங்கிய தினேஷ் கார்த்திக் , ரஸ்ஸல் இருவரும் அதிரடியாக விளையாடினர். ரஸ்ஸல் 21 பந்தில் அரைசதம் விளாசி 54 ரன்கள் எடுத்து வெளியேறினார். அடுத்த சில நிமிடங்களில் தினேஷ் கார்த்தி 40 ரன்னில் பெவிலியன் திரும்பினார். அடுத்து இறங்கிய பாட் கம்மின்ஸ் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி 23 ரன்னில் 51 ரன்கள் எடுத்து அரைசதம் அடித்தார்.
பாட் கம்மின்ஸ் கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் 65* ரன்கள் எடுத்து இருந்தார். இறுதியாக கொல்கத்தா அணி 19.1 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டை பறிகொடுத்து 202 ரன்கள் எடுத்து 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. சென்னை அணி இதுவரை 4 போட்டியில் விளையாடி தொடர்ந்து 3 போட்டிகளில் வெற்றியும், ஒரு போட்டியில் தோல்வியை தழுவியுள்ளது.
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…
வாஷிங்டன் : அமெரிக்காவும் சீனாவும் கூட்டாக தங்கள் தற்போதைய வரிகளில் ஒரு பகுதியை 90 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளன.…
டெல்லி : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும் ‘தி…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான மோதலுக்குப் பிறகு, நாட்டின் பாதுகாப்பு நோக்கங்களுக்காக இஸ்ரோவின் 10 செயற்கைக்கோள்கள் தொடர்ந்து கண்காணித்து…
சென்னை : தியாகராய நகர் (T.Nagar) ரங்கநாதன் தெருவில் உள்ள சோபா ஆடையகத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. சம்பவ…
சென்னை : சென்னை பரங்கிமலையில் கல்லூரி மாணவர்கள் இருவர் செல்போன் பேசியபடி தண்டவாளத்தை கடக்க முயன்ற போது ரயில் மோதி…