சென்னை – டெல்லி அணிகளுக்கு இடையிலான போட்டி, ஏப்ரல் 10 ஆம் தேதி மும்பையில் நடைபெறவுள்ள நிலையில் சென்னை அணி மும்பைக்கு புறப்பட்டது.
2021-ம் ஆண்டிற்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் சென்னையில் வரும் ஏப்ரல் 9 ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. இந்த போட்டி, சென்னை, மும்பை, கொல்கத்தா, பெங்களூரு மைதானங்களில் தலா 10 போட்டிகளும், அகமதாபாத் மற்றும் டெல்லி மைதானத்தில் தலா 8 போட்டிகளும் நடைபெறவுள்ளது. அதனைதொடர்ந்து இறுதிப்போட்டி மற்றும் பிளேஆஃப் சுற்று, அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இந்த ஐபிஎல் வரலாற்றில் சோகமான செய்தி என்னவென்றால், எந்த அணியும் தங்கள் சொந்த மைதானத்தில் விளையாடவில்லை. இதனால் ரசிகர்கள் கடும் ஏமாற்றம் அடைந்தனர். தற்பொழுது சென்னையில் உள்ள சேப்பாக்கம் மைதானத்தில் பயிற்சி பெற்று வந்த சென்னை அணி, தனது முதல் போட்டியில் டெல்லி அணியுடன் மோதவுள்ளது.
இந்த போட்டி, ஏப்ரல் 10 ஆம் தேதி மும்பையில் நடைபெறவுள்ள நிலையில் சென்னை அணி, மும்பைக்கு புறப்பட்டது. மேலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. முதல் ஐந்து லீக் போட்டிகளை மும்பையில் விளையாடவுள்ளது. மேலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, இனி மும்பையில் பயிற்சியை மேற்கொள்ளும் என அணியின் தலைமை செயல் அதிகாரி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…
காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…