9 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றி பெற்று பஞ்சாப் அணியை ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேற்றியது .
இன்றைய ஐபிஎல் தொடரின் 53- வது லீக் போட்டி அபுதாபி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ்- கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதியது.இதில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் தோனி பந்துவீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி ,முதலில் பஞ்சாப் அணி பேட்டிங் செய்தது. 20 ஓவர் முடிவில் பஞ்சாப் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 153 ரன்கள் அடித்தது .154 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை அணி களமிறங்கியது.
சென்னை அணியின் தொடக்க வீரர்களாக கெய்க்வாட், டு பிளேசிஸ் ஆகிய இருவரும் களம் இறங்கினார்கள். அதிரடியாக விளையாடி வந்த டு பிளேசிஸ் 48 ரன்னில் விக்கெட்டை இழந்தார்.பின்னர், அம்பதி ராயுடு, கெய்க்வாட் இருவரும் கூட்டணி அமைத்து அணியின் எண்ணிக்கையை உயர்த்தினார்கள்.சிறப்பாக விளையாடிய கெய்க்வாட் அரைசதம் விளாசினார்.
இறுதியாக சென்னை அணி 18.5 ஓவரிகளில் 1 விக்கெட்டை இழந்து 154 ரன்கள் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.களத்தில் கெய்க்வாட் 62* ,ராயுடு 30* ரன்களுடன் இருந்தனர் .இந்த வெற்றி மூலம் சென்னை அணி புள்ளிகள் பட்டியலில் 12 புள்ளிகளுடன் 7-ஆம் இடத்தில் உள்ளது.இந்த வெற்றியின் மூலமாக சென்னை அணியுடன் இணைந்து பஞ்சாப் அணியும் ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறியது.
அகமதாபாத் : இன்று அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத்…
அகமதாபாத் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில்…
சென்னை : இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது…
ஈரோடு : பண்ணை வீட்டில் தனியாக இருந்த தம்பதி கொலை செய்யப்பட்டதாக நேற்று இரவு ஈரோடு பகுதி போலீசாருக்கு தகவல்…
நெல்லை : இன்னும் ஒரு வருடத்திற்குள் தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளதால் தற்போதே கூட்டணி குறித்த பேச்சுக்கள் அரசியல்…
மும்பை : WAVES 2025 மாநாடு நேற்று மும்பையில் தொடங்கியது. பிரதமர் நரேந்திர மோடி நேற்று விழாவில் கலந்து கொண்டு…