CSK vs KKR,IPL 2021: கொல்கத்தாவை வீழ்த்தி மீண்டும் முதலிடத்திற்கு செல்லுமா..? சென்னை சூப்பர் கிங்ஸ்..!

Published by
Edison

இன்றைய 38 வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன.

இந்தியன் பிரீமியர் லீக்கின் (ஐபிஎல்) 38 வது போட்டியில், மகேந்திர சிங் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணியானது,மோர்கன் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (கே.கே.ஆர்) அணியை எதிர்கொள்கிறது.

அதன்படி,இன்று மாலை 3.30 மணிக்கு, அபுதாபி ஷேக் சயீத் ஸ்டேடியத்தில் சென்னை மற்றும் கொல்கத்தா அணிகளுக்கிடையிலான போட்டி நடைபெறவுள்ளது. இதுவரை சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் இணைந்து 26 ஆட்டங்களில் விளையாடியுள்ளன. அதில், 16 போட்டிகளில் சிஎஸ்கே வெற்றி பெற்றுள்ளது. மறுபுறம், கேகேஆர் ஒன்பது ஆட்டங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. ஒரு போட்டி சமநிலையில் முடிந்தது.

முன்னதாக, 2-ம் இடத்தில் இருந்த சென்னை அணி, ஆர்சிபி அணியை  வீழ்த்தி 14 புள்ளிகள் பெற்று புள்ளி பட்டியலில் முதலிடத்திற்கு சென்றது. மறுபுறம், மும்பை அணியை தோற்கடித்து, கொல்கத்தா அணி 8 புள்ளிகள் பெற்று 6-வது இடத்தில் இருந்து 4-வது இடத்திற்கு வந்தது. இந்த நிலையில் சென்னை மற்றும் கொல்கத்தா அணிகளுக்கிடையே இன்று நடக்கும் போட்டி மிகவும் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நேற்றைய போட்டியில் ராஜஸ்தான் அணியை வீழ்த்தி டெல்லி 16 புள்ளிகள் பெற்று முதலிடத்திற்கு சென்றது. இதனால், கொல்கத்தாவை வீழ்த்தி சென்னை முதலிடத்திற்கு வருமா..? என்பது இன்றைய போட்டியில் தெரியும்.

கணிக்கப்பட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் லெவன் அணி:
ஃபேப் டு பிளெஸ்ஸி, ருத்ராஜ் கைவாட், மொயின் அலி, ராயுடு, சுரேஷ் ரெய்னா, எம்எஸ் தோனி (கேப்டன், விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, பிராவோ, தீபக் சாஹர், ஷர்துல் தாக்கூர், ஜோஷ் ஹேசில்வுட்.

கணிக்கப்பட்ட கொல்கத்தா நைட் ரைடர்ஸ் லெவன் அணி: சுப்மான் கில், வெங்கடேஷ் ஐயர், ராகுல் திரிபாதி, இயோன் மோர்கன் (கேப்டன்), நிதிஷ் ராணா, தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), ஆண்ட்ரே ரசல், சுனில் நரைன், வருண் சக்கரவர்த்தி, லோக்கி பெர்குசன், பிரசித் கிருஷ்ணா.

Recent Posts

கடைசி வரை திக் திக் நொடியில் சென்னை! கடைசி நேரத்தில் பெங்களூர் த்ரில் வெற்றி!

கடைசி வரை திக் திக் நொடியில் சென்னை! கடைசி நேரத்தில் பெங்களூர் த்ரில் வெற்றி!

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…

6 hours ago

ஒரே ஓவரில் மிரட்டிவிட்ட ஷெப்பர்ட்! சென்னைக்கு பெங்களூர் வைத்த பெரிய டார்கெட்?

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…

8 hours ago

இந்தியா – பாகிஸ்தான் இடையே அஞ்சல் பரிமாற்றம் நிறுத்தம்!

டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…

11 hours ago

சென்னை to இலங்கை விமானத்தில் பஹல்காம் தீவிரவாதிகள்? விமான நிலையத்தில் பரபரப்பு!

கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…

12 hours ago

பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!

இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…

14 hours ago

”5,6 ஆகிய தேதிகளில் வெயிலை தணிக்க வரும் கனமழை” – வானிலை மையம் தகவல்.!

சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…

14 hours ago