CSK vs DC [ImageSource : Twitter/@IPL]
ஐபிஎல் தொடரின் இன்றைய CSK vs DC போட்டியில், முதலில் பேட் செய்த சென்னை அணி 167/8 ரன்கள் குவித்துள்ளது.
16-வது ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் சென்னை சேப்பாக்கத்தில் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் தோனி, முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
அதன்படி, சென்னை அணியில் முதலில் களமிறங்கிய ருதுராஜ் கெய்க்வாட், கான்வே நல்லத் தொடக்கம் அமைத்துக்கொடுத்தனர். இருவரும் ஆட்டமிழந்த நிலையில் சிவம் துபே 3 சிக்ஸர்களை விளாசி 12 பந்துகளில் 25 ரன்களை குவித்தார். அவருடன் அம்பதி ராயுடு இணைந்து 23 ரன்கள் எடுக்க இருவரும் தங்களது விக்கெட்டை இழந்தனர்.
இவர்களையடுத்து, களமிறங்கிய ரவீந்திர ஜடேஜா மற்றும் தோனி பொறுப்பாக விளையாடி ரன்களை எடுக்க, மிட்செல் மார்ஷ் வீசிய பந்தில் தங்களது விக்கெட்டை இழந்து களத்தை விட்டு வெளியேறினர். முடிவில், சென்னை அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 167 ரன்கள் அடித்தது.
சென்னை அணியில் அதிகபட்சமாக சிவம் துபே 25 ரன்களும், ருதுராஜ் கெய்க்வாட் 24 ரன்களும், அம்பதி ராயுடு 23 ரன்களும், ரஹானே 21 ரன்களும் குவித்துள்ளனர். டெல்லி அணியில் மிட்செல் மார்ஷ் 3 விக்கெட்டுகளையும், அக்சர் படேல் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளனர்.
லண்டன் : ஜோ ரூட் இங்கிலாந்து மற்றும் இந்தியா இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் டியூக்ஸ் பந்து அடிக்கடி வடிவம்…
விழுப்புரம் : பாமக கட்சியில் ஏற்கனவே ராமதாஸுக்கும் அவருடைய மகன் அன்புமணிக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு இருப்பது உட்கட்சி பிரச்சினையாக…
சென்னை : தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநரகம், மாநிலம் முழுவதும் உள்ள பள்ளிகளில் வகுப்பறைகளை ‘ப’ வடிவில் மாற்றி அமைக்க…
சிவகங்கை : மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவிலில் தற்காலிக ஊழியராகப் பணியாற்றிய அஜித்குமார் என்ற இளைஞர், நகை…
சென்னை : இசையமைப்பாளர் இளையராஜா, நடிகை வனிதா விஜயகுமார் தயாரித்து நடித்த ‘Mrs & Mr’ திரைப்படத்தில் தனது ‘ராத்திரி…
குஜராத் : மாநிலம் அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் (விமான எண் AI171) லண்டன் கேட்விக் விமான நிலையத்திற்கு புறப்பட்ட…