விராட் கோலிக்கு வாழ்த்துக்கள் தெரிவிக்கும் விதமாக, அவரின் விடியோக்களை பகிர்ந்து, அதில் கோலி முகத்திற்கு பதிலாக வார்னே, தனது முகத்தை இணைத்துள்ளார்.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் கடந்த 10 ஆண்டுகளில் டெஸ்ட், ஒருநாள் போட்டி மற்றும் டி-20 போட்டிகளில் பல சாதனைகள் நிகழ்த்திய வீரரை தேர்வு செய்து விருதுகள் வழங்கப்படுகிறதாகவும், இதற்கான சிறந்த வீரர்களின் பட்டியலையும் ஐசிசி வெளியிட்டுள்ளது.
இதில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, ஒருநாள் மற்றும் டி-20 தொடர்களில் சிறந்த வீரர் என்ற விருதை பெற்றார். அவருக்கு கிரிக்கெட் வீரர்கள், ரசிகர்கள் என தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், விராட் கோலிக்கு வாழ்த்துக்களை தெரிவிக்கும் விதமாக ஆஸ்திரேலியா அணியின் அதிரடி வீரர் டேவிட் வார்னர் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்திருந்தார்.
அந்த வீடியோவில் வார்னர், விராட் கோலியின் விடியோக்களை பகிர்ந்து, அதில் கோலி முகத்திற்கு பதிலாக தனது முகத்தை ஃபேஸ் ஆப் மூலம் இணைத்துள்ளார். அந்த விடியோவிற்கு “தசாப்தத்தின் சிறந்த கிரிக்கெட் வீரரான இவரை யாராலும் அடையாளம் காணவே முடியாது” என கேப்ஷனாக பதிவிட்டுள்ளார். வார்னரின் இந்த வீடியோ, தற்பொழுது சமூகவலைத்தளத்தில் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது.
டெல்லி : ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி பொறுப்பேற்று நேற்றுடன் 4 ஆண்டுகள் நிறைவு பெற்று 5ஆம்…
பஞ்சாப் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல், அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் எல்லைக்குள் உள்ள…
இஸ்லாமாபாத் : பாகிஸ்தானின் அண்டை நாடுகளான ஈரான் மற்றும் ஆப்கானிஸ்தான் எல்லை பகுதியில் அமைந்துள்ள மாகாணம் பலுசிஸ்தான். இந்த மாகாணத்தில்…
சென்னை : இன்று தமிழ்நாட்டில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. தேர்வு எழுதியதில் 95.03% மாணவர்கள் தேர்ச்சி பெற்று…
சென்னை : தமிழ்நாட்டில் கடந்த மார்ச் 1, 2025 முதல் மார்ச் 22, 2025 வரையில் +2 பொதுத்தேர்வுகள் நடைபெற்றன.…