கடந்த 10 ஆண்டுகளில் தனது கனவு அணியை ஐசிசி வெளியிட்டுள்ளது. ஒருநாள் மற்றும் 20 ஓவர் போட்டியில் மகேந்திர சிங் தோனி தான் கேப்டன்.
2021-ம் ஆண்டு தொடங்க இருக்கும் நிலையில், கடந்த 10 ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீரரை தேர்வு செய்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) விருதுகள் வழங்குகிறது. இந்த விருது வழங்கும் விழா நாளை தொடங்குகிறது. கடந்த 10 ஆண்டுகளில் டெஸ்ட், ஒருநாள் போட்டி மற்றும் டி20 போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியர்வர்கள் சிறந்த கிரிக்கெட் வீரராக தேர்வு செய்யப்படுவர்.
இதற்கான பரிந்துரை பட்டியலில் விராட் கோலி, அஸ்வின், ஜோரூட், ஸ்டீவ் சுமித், டிவில்லியர்ஸ், வில்லியம்சன், சங்ககரா ஆகிய 7 வீரர்கள் உள்ளனர். இதுபோன்று, கடந்த 10 ஆண்டில் சிறந்த டெஸ்ட் வீரர், ஒருநாள் போட்டியின் சிறந்த வீரர், 20 ஓவர் போட்டியின் சிறந்த வீரர் ஆகியோரும் தேர்வு செய்யப்படுகிறார்கள். மேலும் சிறந்த வீராங்கனைகளும் தேர்வு செய்யப்படுகிறார்கள். டெஸ்ட் போட்டிக்கான சிறந்த வீரருக்கான பட்டியலில் விராட் கோலி, வில்லியம்சன், ஸ்டீவ் சுமித், ஜோரூட், ஆண்டர்சன், ஹெராத், யாசிர் ஷா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
ஒருநாள் போட்டிக்கான சிறந்த வீரருக்கான தேர்வு பட்டியலில் டோனி, விராட் கோலி, ரோகித் சர்மா, டிவில்லியர்ஸ், மலிங்கா, ஸ்டார்க், சங்ககரா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். 20 ஓவர் போட்டிக்கான பரிந்துரை பட்டியலில் கோலி, ரோகித் சர்மா, ஆரோன்பிஞ்ச், கிறிஸ் கெய்ல், ரஷீத்கான், இம்ரான் தாகிர், மலிங்கா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இந்நிலையில், கடந்த 10 ஆண்டுகளில் ஐசிசி-யின் டி20 மற்றும் ஒருநாள் போட்டியின் கனவு அணியை தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அதில், ஒருநாள் மற்றும் டி20 போட்டியில் தோனிதான் கேப்டன்.
ஐசிசி-யின் டி20 போட்டிக்கான கனவு அணி: ரோஹித் சர்மா, கிறிஸ் கெய்ல், ஆரோன்பிஞ்ச், விராட் கோலி, டிவில்லியர்ஸ், க்ளென் மேக்ஸ்வெல், எம்.எஸ் தோனி (கேப்டன்), போலார்ட், ரஷீத் கான், பும்ரா, மலிங்கா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
ஐசிசி-யின் ஒருநாள் போட்டிக்கான கனவு அணி: ரோஹித் சர்மா, டேவிட் வார்னர், விராட் கோலி, டிவில்லியர்ஸ், ஷகிப் அல் ஹசன், எம்.எஸ் தோனி(கேப்டன்), பென் ஸ்டோக்ஸ், மிட்சல் ஸ்டார்க், ட்ரெண்ட் போல்ட், இம்ரான் தாஹிர், லலித் மலிங்கா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா ராணுவம் வெற்றிகரமாக தீவிரவாதிகள் முகாம்களை அழித்துள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர்…
கொல்கத்தா : ஐபிஎல் 2025-இன் 57-வது போட்டியில், நடப்பு சீசனில் லீக் சுற்றுடன் நடையை கட்டவுள்ள சென்னை மற்றும் பிளே…
டெல்லி : ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22, 2025 அன்று நடந்த பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக தகவல்…
டெல்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு இந்தியா பழிவாங்கியுள்ளது. மே 7 ஆம் தேதி நள்ளிரவு சுமார் 1.30 மணியளவில்,…
சென்னை : மத்திய உள்துறை அமைச்சகத்தின் அறிவுறுத்தலின்படி, சில முக்கிய நிறுவல்களில் சிவில் பாதுகாப்பு பயிற்சி மற்றும் ஒத்திகையை ஏற்பாடு…
டெல்லி : பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இன்று (மே 07) இலக்குகளைக் குறிவைத்து ராணுவ தாக்குதல்களை மேற்கொண்டுள்ளோம்" என்று…