”அசோக வனத்திற்கு செல்லும்போது அனுமன் பின்பற்றிய கொள்கையே ஆபரேஷன் சிந்தூர்” – ராஜ்நாத் சிங்.!
ஆபரேஷன் சிந்தூர் மூலமாக இந்தியா தன் ராணுவ பலத்தை காட்டியுள்ளது என்று ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்து பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம் அளித்துள்ளார்.

டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா ராணுவம் வெற்றிகரமாக தீவிரவாதிகள் முகாம்களை அழித்துள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். இந்திய படைகள் வரலாறு படைத்துள்ளதாகவும் அவர் பெருமிதம் தெரிவித்துள்ளார். பாதுகாப்பு படைகளின் நடவடிக்கையால் நாடே பெருமையடைந்துள்ளது.
நள்ளிரவில் நமது படைகள் துல்லியமாக இலக்கை தாக்கியதாக தெரிவித்த ராஜ்நாத் சிங், ஆப்ரேசன் சிந்தூர் நடவடிக்கையால் இந்தியாவிற்கு முப்படைகளும் பெருமை சேர்த்துள்ளன, பிரதமர் நரேந்திர மோடியின் தெளிவான திட்டமிடல் தான் தாக்குதலை சாத்தியமாக்கியது.
அப்பாவி மக்களைக் கொன்றவர்கள் மீது மட்டுமே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும், அசோக வனத்திற்கு செல்லும்போது அனுமன் பின்பற்றிய கொள்கையே ‘operation sindoor’ -லும் பின்பற்றப்பட்டது. ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் அப்பாவி மக்கள் யாரும் கொல்லப்படவில்லை. நமது ராணுவ படைகள் சுதந்திரமாக செயல்பட ஆதரவு அளித்த பிரதமர் மோடிக்கு நன்றி என கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், ”பிரதமர் நரேந்திர மோதியால் தான் ‘Operation Sindoor’ பதிலடி தாக்குதல் சாத்தியமானது. மீண்டும் ஒருமுறை தீவிரவாதிகளுக்கு தக்க சமயத்தில் பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு படை வீரர்களுக்கு பிரதமர் மோடி முழு சுதந்திரம் வழங்கினார். பிரதமரின் வழிகாட்டுதலின்படி இந்திய ஆயுதப் படைகள் நம் அனைவரையும் பெருமைப்படுத்தி உள்ளன.