களைகட்டிய மதுரை! திருக்கல்யாண வைபவம்., முக்கிய தகவல்கள் இதோ…
மதுரை மீனாட்சி அம்மன் - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண வைபவம் இன்று காலை கோலாகலமாக நடைபெற்றது. இதனை காண லட்சக்கணக்கான பக்த்ர்கள் மதுரையில் குவிந்துள்ளனர்.

மதுரை : இன்று (மே 8) மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மீனாட்சி – சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண நிகழ்வு காலை 8.35 மணி முதல் 8.59 மணிக்குள் கோலாகலமாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. அதேபோல திருக்கல்யாண வைபவம் தற்போது நடைபெற்றுள்ளது. இந்த திருக்கல்யாணத்தை காண லட்சக்கணக்கான பக்தர்கள் மதுரையில் குவிந்துள்ளனர்.
திருக்கல்யாணத்தை காண அமைச்சர் பழனிவேல் தியக்காரராஜன், முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜு, ஆர்.பி.உதயகுமார் உள்ளிட்ட முக்கிய அரசியல் பிரபலங்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டுள்ளனர். ஆன்லைனில் முன்பதிவு செய்த 12 ஆயிரம் பேருக்கு கோயில் வளாகத்தில் அனுமதி வழங்ப்பட்டுள்ளது.
கட்டணச் சீட்டு உள்ளவர்கள் வடக்கு கோபுரம் வழியாகவும், இலவச டோக்கன் உள்ளவர்கள் தெற்கு கோபுரம் வழியாகவும் அனுமதிக்கப்படுவர். மற்றவர்களுக்கு எல்இடி திரைகள் மூலமும், ஆன்லைன் வழியாக நேரடியாகவும் இந்த திருக்கல்யாண வைபவம் காண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
திருக்கல்யாண மேடை 10 டன் எடை கொண்ட வண்ணப் பூக்களாலும், வண்ணப் பட்டுத் துணிகளாலும் அலங்கரிக்கப்பட்டுள்ளது. மேற்கு மற்றும் வடக்கு ஆடி வீதிகளில் பக்தர்கள் தரிசிக்க பிரமாண்ட பந்தல்கள் அமைக்கப்பட்டுள்ளன. கோயிலைச் சுற்றிய நான்கு மாட வீதிகளில் பெரிய LED திரைகள் மூலம் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
திருக்கல்யாணம் காணும் பக்த்ர்கள் மொய் வைக்க எதுவாக ஆங்காங்கே QR Code வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் பக்தர்கள் ஆன்லைன் வழியாகவே தங்கள் மொய் பணத்தை அளிக்கலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது. திருக்கல்யாணம் காண வந்த பக்தர்களுக்கு உணவு அளிக்க சுமார் 1 லட்சம் பேருக்கு உணவு தயாராகி வருகிறது.