உலகக்கோப்பை தொடருடன் தோனி ஓய்வு ! பிடிஐ நிறுவனம் தகவல் !

நடப்பு உலகக்கோப்பை இங்கிலாந்தில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்த உலகக்கோப்பை தொடரில் பத்து அணிகள் விளையாடி வருகிறது.இந்த தொடரில் இந்திய அணி இரண்டாம் இடத்தில் உள்ளது.
இந்திய அணி கிரிக்கெட்டில் எந்த தொடரில் விளையாடினாலும் கண்டிப்பாக அந்த போட்டியில் தோனியின் பெயர் அடிபட்டு கொண்டுதான் இருக்கும் காரணம் தோனி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும் , மோசமாக ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும் நெட்டிசன்கள் தோனி பற்றி அதிகமான விமர்சனங்களை செய்து வருவார்கள்.
அவர்களுக்கு பதிலடியை தனது ஆட்டத்தின் மூலமாக தோனி கொடுப்பது வழக்கம். இந்நிலையில் உலகக்கோப்பைக்கு முன்னாள் தோனி ஓய்வை பெறுவார் என தகவல் வெளியானது.அப்போது பலர் தோனி ஓய்வை அறிவிப்பது நல்லது என கருத்து தெரிவித்தனர்.
உலகக்கோப்பையில் இந்திய அணி வெற்றி பெற வேண்டும் என்றால் தோனியின் அனுபவம் முக்கியம் என பல முன்னாள் வீரர்கள் கூறினார்.ஆனால் உலகக்கோப்பை தொடங்கியதில் இருந்து தோனி மீது மோசமான விமர்சனங்கள் எழுந்து வருகிறது.
இந்நிலையில் நடப்பு உலகக்கோப்பை போட்டியோடு தோனி ஓய்வு பெற உள்ளதாக பிடிஐ செய்தி நிறுவனம் செய்தியை வெளியிட்டு உள்ளது.ஆனால் தோனி தரப்பில் இருந்து எந்த வித அறிவிப்பும் வெளியாகவில்லை
லேட்டஸ்ட் செய்திகள்
ரஷ்யாவிடம் எரிபொருள் வாங்கும் இந்தியா, சீனா மீது அமெரிக்கா 500% வரி? – செனட் மசோதாவுக்கு ஒப்புதல்.!
July 2, 2025
அஜித் சம்பவம் போல் மற்றொரு அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள்.., இளைஞரை சரமாரியாக தாக்கிய போலீசார்.!
July 2, 2025