பியூஷ் சாவ்லாவை CSK க்கு எடுத்து தல தோனி..!

பியூஷ் சாவ்லாவை CSK க்கு எடுத்து தல தோனி என்று தகவல் வெளியாகியுள்ளது.
கொரோனா வைரஸ் உலகளவில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்த வைரஸ் தாக்கம் காரணமான உலகளவில் பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் கடந்த மார்ச் மாதம் 29-ம் தேதி தொடங்கவிருந்த ஐபிஎல் தொடர், கொரோனா அச்சம் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது.
மேலும், உலகளவில் ஐபிஎல் போட்டிகளுக்கு ரசிகர்களை கொண்டுள்ளதால், இந்த தொடரை கண்டிப்பாக நடத்த பிசிசிஐ திட்டமிட்டது. அதன்படி, இந்தாண்டு ஐபிஎல் போட்டிகளை இந்தியாவில் செப்டெம்பர் மாத இறுதியில் நடத்துவதற்கு பிசிசிஐ திட்டமிட்டது. அதன்படி, ஐபிஎல் போட்டிகளை நடத்துவதற்கு அனுமதி தருமாறு மத்திய அரசிடம் அனுமதி கோரியது என்று தகவல் தெரிவிக்கப்பட்டது.
இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து கொண்டு வரும் நிலையில், ஐபிஎல் தொடர்கள் நடத்துவதற்கு அனுமதி வழங்காவிட்டால், ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தப்படும் எனவும், ஐபிஎல் தொடரை நடத்த மத்திய அரசின் அனுமதி தேவை என ஐபிஎல் தலைவர் பிரிஜேஷ் கூறினார். இந்நிலையில் செப்டம்பர் 19-ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் இந்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடரை நடத்த ஆலோசனை செய்துள்ளோம் என்று ஐபிஎல் தலைவர் பிரிஜேஷ் படேல் தெரிவித்துள்ளார்.மேலும் நவம்பர் 8-ஆம் தேதி இறுதிப்போட்டி நடைபெறும் என்று தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இந்த ஐபிஎல் தொடருக்கான ஏலம் நடைபெற்று முடிந்த நிலையில் புதிய வீரர்களாக பல அணிகளும் பல வீரர்களை ஏலத்தில் எடுத்தது. அந்த வகையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கொல்கத்தா அணியின் சுழற்பந்து வீச்சாளரான பியூஷ் சாவ்லாவை 6.75 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது.
மேலும் இது குறித்து பியூஷ் சாவ்லாவை சமீபத்தில் அளித்துள்ள பேட்டியில் கூறியது, நான் கேட்டேன் தோனியிடம் யார் என்னை சென்னை அணியில் எடுக்க முடிவு செய்தது என்று கேட்டதற்கு தோனி என்னிடம் நான் தான் கூறினேன் என்று கூறினார்.
லேட்டஸ்ட் செய்திகள்
குரூப் 2 மற்றும் 2A தேர்வு முடிவுகள் வெளியானது.!
May 5, 2025