நேற்று முந்தினம் நடந்த முதல் அரை இறுதி போட்டியில் இந்திய அணியும் ,நியூஸிலாந்து அணியும் மோதின. இப்போட்டியில் இந்திய அணியை 18 ரன்கள் வித்தியாசத்தில் நியூஸிலாந்து அணி வீழ்த்தியது.
இப்போட்டியில் தொடக்க வீரர்களான ரோஹித் , கே .எல் ராகுல் இருவரும் களமிங்கினர். இருவருமே ரோஹித் 1 ரன்னில் வெளியேற பின்னர் கோலி , கே .எல் ராகுல் இருவருமே 1 ரன்னில் அவுட் ஆனார்கள்.
மத்தியில் களமிறங்கிய ஹர்திக் பாண்டிய , பண்ட் இருவருமே 32 ரன்கள் அடித்ததன் மூலம் அணியின் சற்று உயர்ந்தது.பின்னர் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி ,ஜடேஜா இவர்கள் இருவரின் கூட்டணியில் இணைந்து இருவரும் சிறப்பாக விளையாடி வந்தனர்.
போட்டியில் ஜடேஜா 48 ஓவரில் விக்கெட்டை பறிகொடுக்க பின்னர் அதிரடியாக விளையாட வேண்டிய நிலைமைக்கு தோனி தள்ளப்பட்டார்.இதனை தொடர்ந்து 49 ஓவரின் முதல் பந்தில் சிக்ஸர் விளாசினார். அடுத்த பந்தில் ரன் எடுக்காமல் நின்றார்,பின்னர் அடுத்த பந்தை அடித்து இரண்டு ரன்கள் ஓட முயற்சி செய்த போது தோனி ரன் அவுட் ஆனார்.இதனால் ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியது.
இந்நிலையில் தோனி விளையாடும் போது மூன்றாவது பவர் பிளே கிரிக்கெட் முறைப்படி மூன்றாவது பவர் பிளே போது 5 வீரர்கள் மட்டும் தான் பௌலிங் வட்டத்திற்கு வெளியே நிற்கவேண்டும்.தோனியை ரன் அவுட் செய்த மார்ட்டின் குப்டில் சேர்ந்து வட்டத்திற்கு வெளியே 6 பேர் நின்றார்கள் 5 பேர் இருந்து இருந்தால் தோனி ரன் அவுட் ஆகி இருக்க முடியாது என ரசிகர்கள் கூறி வருகின்றனர். இந்த விவகாரம் கிரிக்கெட் உலகில் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…
ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…
லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…
தர்மசாலா : இன்று ஐபிஎல் 2025 இன் 58-வது போட்டி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே…
பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…