rohit and Dinesh Karthik [Image source : file image ]
ஐபிஎல் வரலாற்றில் 17 முறை டக்-அவுட் ஆன வீரர் என்ற சாதனையை பெங்களூர் வீரர் தினேஷ் கார்த்திக் படைத்துள்ளார்.
நேற்று குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் 2023 போட்டியின் போது, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வீரர் தினேஷ் கார்த்திக், ஐபிஎல்லில் அதிக டக் அவுட்கள் என்ற ரோஹித் சர்மாவின் மோசமான சாதனையை முறியடித்தார்.
நேற்று பெங்களூரு அணி பேட்டிங் செய்யும்போது குஜராத் அணியின் இடது கை வேகப்பந்து வீச்சாளர் யாஷ் தயாள் பந்து வீசியபோது, ஐபிஎல்லில் அவரது 17வது டக் அவுட்டாக கார்த்திக் கோல்டன் டக் கேட்ச் கொடுத்து நேற்று ஆட்டமிழந்தார். மேலும், இதற்கு முன்னதாக மும்பை அணியின் கேப்டன் ரோஹித் சர்மா 16 டக் ஆகி மோசமான சாதனையை படைத்திருந்தார்.
தற்போது அந்த சாதனையை தினேஷ் கார்த்திக் முறியடித்துள்ளார். அடுத்ததாக சுனில் நரைன் (15), மந்தீப் சிங் (15), ஆகியோரும் இந்த மோசமான சாதனை பட்டியலில் உள்ளனர்.
மேலும், ஐபிஎல் 2023 சீசன் 12 இன்னிங்ஸ்களில் மூன்று டக்களுடன் வெறும் 140 ரன்களை எடுத்த கார்த்திக்கிற்கு இந்த சீசன் ஐபிஎல் போட்டி மோசமாக அமைந்துள்ளது. மேலும், நேற்று நடைபெற்ற குஜராத் அணிக்கு எதிரான இந்த போட்டியில் பெங்களூர் அணி தோல்வியை தழுவியது. இதனால் பிளே ஆப் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பையும் தவறவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : இந்தியாவின் எல்லையோர குடியிருப்பு பகுதிகளை குறிவைத்து பாகிஸ்தான் தாக்குதலை தொடுத்துள்ளது. இதனை இந்திய ராணுவம் பெரும்பாலும் முறியடித்தாலும்,…
டெல்லி : பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தி அதனை தரைமட்டமாக்கிய காட்சிகளை இந்திய ராணுவம் வெளியிட்டது. ஜம்மு -…
டெல்லி : இந்திய கிரிக்கெட் உலகின் மிக முக்கிய அடையாளமாக விளங்குபவர் விராட் கோலி. ரசிகர்களால் 'கிங்' கோலி என…
டெல்லி : எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியது பற்றியும் ஆபரேஷன் சிந்தூர் தற்போதைய நிலை குறித்தும் டெல்யில் இன்று…
சண்டிகர் : காஷ்மீர் பஹல்காமில் பயங்கரவாதிகள் தாக்குதல், அதற்கு பதிலடியாக பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகள் முகாம்கள் மீது ஆபரேஷன் சிந்தூர்…